ஆண்டின் சிறந்த ஆண்டறிக்கைகள் மற்றும் கணக்குகளுக்கான விண்ணப்பங்களை APFASL ஏற்றுக்கொள்கின்றது

Monday, 08 April 2019 13:18 Piyoshila
Print

இலங்கை பொதுத்துறைக் கணக்காளர்கள் சங்கம் தற்போது அரச நிறுவனங்களிடமிருந்து சிறந்த ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் போட்டி தொடர்பில் விண்ணப்பங்களைக் கோருகின்றது.

2019 ஆம் ஆண்டு இப்போட்டியானது நிதி அமைச்சுடனும் கணக்காய்வு தலைமை அதிபதி திணைக்களத்துடனும் இணைந்து அரச நிறுவனங்களின் நிதி அறிக்கையிடலை மேம்படுத்தல் நோக்காகக் கொண்டு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சி எனும் சிறப்பம்சங்களை உறுதிப்படுத்தலுக்கு உதவுவதனை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.

அரச நிறுவனங்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், பல்கலைக்கழகங்கள், மாநகர சபைகளும் நகர சபைகளும், கிராம சபைகள், அண்னிய நிதித் திட்டங்கள், வர்த்தக நோக்கமற்ற சட்ட சபைகள் மற்றும் நிதிகள் இப் போட்டியில் பங்கு பற்றலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி 30 சித்திரை 2019 ஆகும். போட்டியில் பங்குபற்ற விரும்பும் நிறுவனங்கள் பின்வரும் விடயங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
2017.12.31 ஆந் திகதி முடிவுற்ற ஆண்டிற்கான ஆண்டறிக்கை
கணக்காய்வாளர் அறிக்கை
செயற்பாட்டு அறிக்கை

விண்ணப்பங்கள் மிகவும் நேர்த்தியான பொறிமுறைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த ஆண்டறிக்கை தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

தெரிவு செய்யும் முறையானது பின்வருமாறு அமையும்.

  1. கட்டாயமற்ற விடயங்கள்
    • ஆட்சி அறிக்கை
    • முகாமை கருத்துக்களும் ஆய்வுகளும்
    • ஆட்சி உப குழுக்களின் அறிக்கைகள்
    • முன்னெடுப்புகள்நிறுவன கட்டமைப்பு/ கட்டுப்பாட்டு ஒழுங்கு மற்றும் நல்லாட்சிக்கான தந்துரோபாய
    • ஒட்டு மொத்த கணக்குகள் மற்றும் அறிக்கைகளின் முன்மொழிவு
  2. கட்டாய விடயங்கள்
    • கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு நியமங்கள், சட்டங்கள், ஒழுங்கு விதிகளின் பின்பற்றல்
    • பொதுவானதும் போதுமானதுமான வெளிப்படுத்தல்கள்
    • நிதி அறிக்கையும் குறிப்புகளும்
    • சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் அறிக்கை
  3. ஏனையவை
    • நேர்த்தியான காலக்கிரமத்தில் ஆண்டறிக்கையிடல்
    • கணக்காய்வு கருத்து

அனைத்து விடயங்களும் ஆரம்பக்கட்ட ஆய்வுக்கு தொழில்நுட்ப குழுவால் உட்படுத்தப்படும். இறுதி தெரிவானது சிறப்புத்தேர்ச்சி நீதிபதிகள் குழுவினால் மேற்கொள்ளப்படும். தெரிவானது முழுமையாக தகுதியின் அடிப்படையிலேயே காணப்படும்.

மேற்படி போட்டியானது APFASL நிறுவனத்தினால் அரச அறிக்கையிடல் மேம்பாடு தொடர்பில் வருடாந்தம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.