Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

வசதிகள்

பதிவுசெய்யப்பட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு நிறுவனம் பல வசதிகளை ஒழுங்குசெய்துள்ளது.

வழிகாட்டல்
கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் தலைவர் அல்லது பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முகாமையாளர் அல்லது கற்கை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முகாமையாளர் ஆகியோரிடம் விசாரிப்பதன் மூலம் முற்கூட்டியே பெற்றுக்கொண்ட சந்திப்பதற்கான அனுமதியுடன் பதிவுசெய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கற்கை நடவடிக்கைகள் அல்லது பயிற்சிபற்றிய வழிகாட்டலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கற்கை மண்டபங்கள்
வேறு நிறுவன நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படாதபோது கற்கை மண்டபம் மாணவ மாணவிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும்.

நூலக வசதிகள்
மாணவ மாணவிகளினதும் அங்கத்தினர்களினதும் பயன்பாட்டுக்காக இருக்கின்ற நிறுவனத்தின் நூலகத்தில் உள்ள வசதிகள் மிகச் சிறந்தது என்பதை நிறுவனம் பெருமையுடன் தெரிவிக்கிறது.

பகிரங்க விடுமுறை தினங்களைத் தவிர்த்து ஏனைய ஒவ்வொரு நாளும் மு.ப.8.00 மணிமுதல் பி.ப.7.00 மணிவரை நூலகம் திறந்திருக்கும். அனைத்து பதிவுசெய்யப்பட்ட மாணவ மாணவிகளும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மத்திய பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு அல்லது அப்பரீட்சையில் சித்திபெற வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு, தமது தொழில் தருநர் அல்லது மேற்பார்வை அங்கத்தினர் அல்லது நிறுவனத்தின் எவராவது அங்கத்தினர் பிணையாக நின்றால் புத்தகங்களை திருப்பி கொண்டுவந்து ஒப்படைக்கும் அடிப்படையில் இரவல் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு புத்தகங்களை இரவல் பெற்றுக்கொள்ளும் உரிமை ஆரம்பத்தில் 02 வருடங்களுக்கு வரையறுக்கப்படும். அத்துடன் அதன் பின்னர் அவ்வுரிமை 02 வருட காலப்பகுதிக்கு மூலோபாய II பரீட்சையில் சித்தியடையும்வரை புதுப்பித்துக்கொள்ள முடியும். ஒருமுறைக்கு 02 புத்தகங்களுக்கு மேற்படாமல் இரண்டு வாரங்களுக்கு இரவலாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

You can Search the Library Catalogue and make reservations by login into the Online Library using your Member or Student Login.

சிற்றுண்டிச் சாலை
மாணவ மாணவிகள், அங்கத்தினர்கள், பணியாட்தொகுதியினர் ஆகியோரின் பயன்பாட்டுக்காக நவீனமான சிற்றுண்டிச்காலையொன்று நிறுவனத்தில் இயங்குகிறது.