Sinhala (Sri Lanka)English (United Kingdom)

CA Sri Lanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

பட்டய கணக்காளாராவது ஏன்?

போட்டித்தன்மை கூர்மை பெறுகின்ற இந்த யுகத்தில் வியாபாரமயம், நிதியிடல், முகாமைத்துவம் என்பவை உள்ளடங்கிய விரிவான விடயப் பரப்பைப்பற்றி, ஒரு விடயத்துக்கு மட்டும் வரையறுக்கப்படாத சிறந்த அறிவை உங்களுக்கு வழங்கி, உங்களுடைய தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பட்டய கணக்காளர் தகைமை திட்டமிடப்பட்டது.

பட்டய கணக்காளார்
பட்டய கணக்காளர் கணக்கீடு, கணக்காய்வு, முகாமைத்துவ கணக்கீடு, தகவல் தொழில்நுட்பம், குத்தகை, கூட்டிணைப்பு மற்றும் வாணிப சட்டம், நிதி முகாமைத்துவம், பொருளியல், ஏனைய தொடர்புடைய விடயங்கள்பற்றி சிறந்த அறிவுடைய கணக்கீட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் நிபுணராவார்.

தற்பொழுது பட்டய கணக்காளர்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டயக்கணக்காளர்களாகவும் முகாமைத்துவ ஆலோசகர்களாகவும் அவர்கள் சேவையாற்றுகின்றனர். பட்டயக்கணக்காளர்கள் இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.

தொழில்சார் எதிர்பார்ப்பு
அண்மைக் காலங்களிலிருந்து பட்டயக்கணக்காளர்களுக்கு நிலவும் கேள்வி துரிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டிருக்கிற விரிவான பரப்பெல்லைக்குரிய பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பட்டயக்கணக்காளர்களின் சேவையை மிக அக்கறையுடன் பெற்றுக்கொள்ள முயற்சியெடுக்கின்றன. இலங்கையின் பட்டயக்கணக்காளர்களின் தொழில் தேர்ச்சியும் சிறப்பறிவும் உலகம் முழுவதிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்பொழுது மொத்த உறுப்பினர்களின் 27% மானவர்கள் வெளிநாடுகளில் சேவையாற்றுகின்றனர்.

அவர்களின் சேவையைப் பெறுவதற்கு உயர்ந்துகொண்டிருக்கின்ற கேள்வியின் காரணமாக, சமீப காலத்தில் பட்டயக்கணக்காளர்களின் சராசரி வருமானம்/ ஊதியம் துரிதமாக அதிகரித்துள்ளது. அதன் பிரகாரம் தமது பரீட்சையையும் பயிற்சியையும் வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த மாணவனுக்கு, மாணவிக்கு உயர்ந்த சம்பள திட்டத்தை எதிர்பார்க்க முடியும்.

இலங்கையில் பட்டயக்கணக்காளர்கள்
கொழும்பு பங்குச் சந்தையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்ற 50 வர்த்தக கம்பனிகளுக்கிடையில் நூற்றுக்கு 60% மானவற்றில் தலைவர், பிரதான நிறைவேற்று அதிகாரி அல்லது நிதிப்பணிப்பாளர் என்றவகையில் கடமையாற்றி, இலங்கை வர்த்தக கம்பனிகளின் பணிப்பாளர் சபையில் உன்னதமான பணிகளை இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்தினர்கள் நிறைவேற்றுகின்றனர்.

தகைமை

  • இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனம் வழங்குகின்ற உலகம் முழுவதிலும் வரவேற்புக்குள்ளாகியுள்ள தகைமை, கணக்கீடு போன்று கணக்கீடு உள்ளடங்காத துறைகளைப்பற்றியம் பூரண அறிவை மாணவ/ மாணவிகளுக்கு வழங்குகின்றது.
  • வழங்குகின்ற விரிவான பயிற்சி மற்றும் உயர்மட்ட பாடநெறிகளின் காரணமாக நீங்கள் உலக வரவேற்பைப் பெறுகின்ற தொழில்சார் நிபுணர்களாக முடியும்.
  • சேவை பெறுநர்களைச் சார்ந்த பட்டயக்கணக்காளர்களை சொத்தாகக் கருதுகின்றனர். அக்கம்பனிகள் முன்னணிவகித்து நீண்டகால வியாபார வெற்றியில் முன்செல்லக்கூடிய உபாயமுறைகளை மற்றவர்களுக்கும் காட்டுகின்றபோது, பட்டயக்கணக்காளர்களை சேவையிலீடுபடுத்துவது ஒரு முதலீடாகக் கருதப்படும்.