Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் இலங்கைப் பொதுத்துறை நிதிக் கணக்காளர்கள் கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கல் 2019 நிகழ்வில் ஒன்பது பொதுத்துறை அமைப்புக்கள் மேன்மைத்துவம்

இலங்கையின் பொதுத்துறை நிதிக் கணக்காளர்கள் கழகம் (APFASL) ஏற்பாடு செய்த மூன்றாவது சிறந்த ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கல் 2019 நிகழ்வில் பல்கலைக்கழகங்கள், அமைச்சுக்கள் சட்டநியதி சபைகள், மாநகராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட ஒன்பது பொதுத்துறை நிறுவனங்கள் தமது உயர்தர நிதி அறிக்கையிடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் திரு. உதய ஆர். செனவிரத்ன மற்றும் உள்நாட்டு மற்றும் உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அரச அமைச்சின் செயலாளர் திரு. காமினி செனவிரத்ன ஆகியோரின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2019 அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இவ்விருது வழங்கல் விழாவில் 22 பொதுத்துறை நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன.

Mr. Udaya R. Seneviratne, Secretary to the President and Mr. Gamini Seneviratne, Secretary to the Ministry of Internal & Home Affairs and Provincial Councils & Local Government flanked by officials of CA Sri Lanka and APFASL.

பல்கலைக்கழகங்களின் பிரிவின் கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெற்றியாளராகவும், மொரட்டுவை பல்கலைக்கழகம் இரண்டாம் நிலையையும் பெற்றுக் கொள்ள பேராதனைப் பல்கலைக்கழகம் மூன்றாம் நிலையைத் தட்டிக் கொண்டது.

ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரிவில் தேசிய விஞ்ஞான மன்றம் வெற்றியடைந்ததுடன், இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERD) இரண்டாவது இடத்தையும், கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

சட்டநியதி நிறுவனங்களின் வகுப்பில், ஊழியர் நம்பிக்கை நிதியம் முதலிடத்தையும் தெங்கு அறுவடை சபை இரண்டாம் இடத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மூன்றாம் இடத்தையும் அடைந்தன.

அமைச்சுக்கள் பிரிவின் கீழ் உள்நாட்டு உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் அமைச்சு வெற்றியாளராகவும், திணைக்களங்கள் பிரிவின் கீழ் இலங்கை விமானப்படை வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டன.

மாகாண சபைகளின் பிரிவில் வடக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர் அலுவலகம் முதலிடத்திலும், வட மத்திய மாகாணத்தின் தலைமைச் செயலாளர் அலுவலகம் இரண்டாம் இடத்திலும், கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர் அலுவலகம் மூன்றாம் இடத்திலும் நிரற்படுத்தப்பட்டன.

நகர சபைகள் பிரிவின் கீழ், பலாங்கொடை நகர சபை பிரதான விருதையும், வவுனியா நகர சபை இரண்டாம் நிலை விருதையும் களுத்துறை நகர சபை மூன்றாம் நிலை விருதையும் தமதாக்கிக் கொண்டன.

மாநகரசபை வகுப்பின் கீழ் தெஹிவளை – கல்கிசை மாநகரசபை வெற்றியாளராகவும், கொழும்பு மாநகரசபை இரண்டாவது இடத்திலும் தேர்வு செய்யப்பட்டன.

பிரதேச சபைகள் பிரிவின் கீழ், நாத்தாண்டிய பிரதேச சபை வெற்றியாளராகவும், கருவலகஸ்வௌ பிரதேச சபை இரண்டாவதாகவும் பசறை பிரதேச சபை மூன்றாம் நிலையிலும் கௌரவப்படுத்தப்பட்டன.

Winners of the third Best Annual Report & Accounts Awards 2019 of CA Sri Lanka’s APFASL with officials of CA Sri Lanka, APFASL and special invitees.

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் APFASL ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த ஆண்டறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருது வழங்கல், பொதுத் துறை அமைப்புக்களால் வெளியிடப்படும் ஆண்டறிக்கைகள் மற்றும் கணக்குகளின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் உதவும்.

இந்த விருது வழங்கலானது 32 பொதுத்துறைக் கணக்காளரக்ள் மற்றும் கணக்காய்வாளர்கள் APFASL மற்றும் இலண்டன் CPFA ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட தராதரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட பட்டய பொது நிதிக் கணக்கியல் (CPFA) வருடாந்தப் பட்டமளிப்புடன் நடைபெற்றது. CPFA தராதரமானது இலங்கையில் பொதுத்துறை நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

A section of the public sector accountants and auditors who were conferred with the Chartered Public Finance Accountancy (CPFA) qualification.

Mr. Gamini Seneviratne, Secretary to the Ministry of Internal & Home Affairs and Provincial Councils & Local Government conferring the CPFA qualification to a public sector accountant in the presence of Mr. Udaya R. Seneviratne, CA Sri Lanka President Mr. Jagath Perera and APFASL President V. Kanagasabapathy.

Mr. Udaya R. Seneviratne, Secretary to the President awarding a certificate to a representative of a public sector institution which excelled at the Public Sector Best Annual Reports & Accounts Awards 2019 in the presence of CA Sri Lanka President Mr. Jagath Perera and APFASL President V. Kanagasabapathy.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத் தலைவர் திரு. ஜகத் பெரேரா, உருவாக்கப்பட்ட காலம் முதல், APFASL ஆனது பொதுத்துறை நிதி முகாமை அதிகாரிகளின் தரநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், நல்லாட்சியை ஊக்குவிப்பதன் மூலம் எந்தவொரு அபிவிருத்தியடையும் பொருளாதாரத்தினதும் அத்திவாரமான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்தி, அவர்கள் பொது நலனில் தங்களை நடத்துவதை உறுதிசெய்கிறது எனக் குறிப்பிட்டார்.

APFASL தலைவர் திரு. வி. கனகசபபதி அவர்கள் உரையாற்றும் போது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வெற்றியானது வலுவான பொதுத்துறை நிதி முகாமைத்துவத்திலேயே தங்கியுள்ளது என்றார். "இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் பொதுத்துறைக் பிரிவு என்ற வகையில், சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப பொதுத்துறை நிதி முகாமையில் உத்தியோகத்தர்களை தொழில்மயமாக்குவதன் மூலம் நாட்டில் பொதுத்துறை நிதி முகாமைத்துவ நடைமுறைகளை வலுப்படுத்துவதே APFASL இன் முக்கிய நோக்கமாகும்" என்று அவர் கூறினார்.