Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வணிக உச்சிமாநாடாகிய, இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் 40 வது தேசிய மாநாடு மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் அங்குரார்ப்பணம்

  • சிறப்பு நினைவு முதல் நாள் முத்திரை உறை வெளியீடு
  • மாநாடு 2000 க்கும் மேறப்ட்ட பிரதிநிதிகளை ஈர்த்துள்ளது

நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வணிக உச்சிமாநாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், பட்டய கணக்காளர்களின் 40 வது தேசிய மாநாடு 2019 அக்டோபர் 14 ஆம் தேதி பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் உல்லாச விடுதியில் சர்வதேச புகழ்பெறற் நிதி வல்லுநர்கள், கூட்டுவணிக மற்றும் வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் முன்னிலையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

3 நாள் நிகழ்வான இம் மாநாடு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் (ICAEW) தலைவர் திருமதி. பியோனா வில்கின்சனின் தலைமையில் திறக்கப்பட்டது. இலங்கை வணிக சம்மேளனத்தின் தலைவரும், ஆக்ஸியாட்டா குழுமத்தின் தெற்காசியப் பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கூட்டுவணிக நிறைவேற்று நிலைத் துணைத் தலைவர் டாக்டர் ஹான்ஸ் விஜயசூரியா அவர்கள் மாநாட்டின் கருப்பொருளான 'உங்கள் உள்ளுணர்வின் தேடல்: சுய கண்டறிதலின் பயணம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

Mr. Jagath Perera presenting a token to Ms. Fiona Wilkinson. CA Sri Lanka Vice President Mr. Manil Jayesinghe, Chairman of National Conference Committee Mr. Dulitha Perera, Chairman of the National Conference Technical Committee Mr. Moiz Rehmanjee, CEO Ms. Dulani Fernando and Secretary Mr. Prasanna Liyanage are also in the picture.

அங்குரார்ப்பண நிகழ்வில், இந்த ஆண்டில் கொண்டாடப்படும் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் வைர விழா மற்றும் தேசிய மாநாட்டின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் சிறப்பு நினைவு முதல் நாள் முத்திரை உறையையும் வெளியிட்டது. இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் தலைவர் திரு. ஜகத் பெரேரா, துணைத் தலைவர் திரு. மணில் ஜெயசிங்க, தேசிய மாநாட்டுக் குழுத் தலைவர் திரு. துலித்த பெரேரா, தேசிய மாநாட்டு தொழில்நுட்பக் குழுத் தலைவர் திரு. மொய்ஸ் ரேஹ்மன் ஜி, தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. துலனி பிரனாந்து மற்றும் செயலாளர் திரு. பிரசன்ன லியனகே ஆகியோர் முன்னிலையில் சிறப்பு நினைவு முதல் நாள் முத்திரை உறை வெளியிடப்பட்டது.

CA Sri Lanka President Mr. Jagath Perera presenting a copy of the special commemorative first day stamp cover to mark the diamond jubilee of CA Sri Lanka and the 40th anniversary of the National Conference to Dr. Hans Wijayasuriya in the presence of Ms. Fiona Wilkinson, Mr. Ranjith Ariyaratne, Postmaster General, Mr. Rajitha K. Ranasinghe, Deputy Postmaster General (Operations), Mr. W. K. S. Sisira Kumara, Deputy Postmaster General (Western Province - South) and Mr. Shantha Kumara Meegama, Director, Philatelic Bureau.

Ms. Wilkinson highlighted that Chartered Accountants play a crucial role in strengthening the global economy due to the important role they play by strengthening the economies of their individual nations. “I think in a fast moving and unpredictable world, its easy to become overwhelmed. Therefore, we must harness our inner strengths, drive and focus to be the best we can be so that we can find that inner magic which helps us regain our inner mojo,” she said in her speech.

Delivering the keynote speech, Dr. Wijayasuriya elucidated the word mojo to generating ‘Moments of Overwhelming Joy’. He emphasized the need to ensure that one generates this mojo with everyone he or she interacts with whether it be with peers, superiors or team members. He highlighted that a leader’s calling is more about igniting the mojo of others and less about igniting their own mojo. “We are at the top, but there are millions of people who are not as privileged as us. So, our vision should be about cultivating the mojo of others,” he said.

Dr. Wijayasuriya emphasized the need to appreciate even the most menial of tasks. “Say thank you, tell them what a great job they have done. When you show gratitude, it gives purpose to even the smallest of tasks,” he said.

He said that everyone complaints about slow economic growth and wait rather than driving it forward. “We must make it our responsibility to drive this growth forward. Business growth comes from economic growth and equally business growth can drive economic growth. I believe instead of waiting for economic growth, we must create that growth,” he said.

Dr. Wijayasuriya also said that business leaders can ignite and spread a nation’s mojo. “We as business leaders can ignite and spread a nation’s mojo, if we are positive. If we take challenges before us with a positive mindset and determination that will ultimately benefit our homes, organizations, nation and society at large,” Dr. Wijayasuriya added.

இரண்டு நாள் தொழிற்திறன் அமர்வுகளைத் தொடர்ந்து 2019 அக்டோபர் 16 ஆம் தேதி நிறைவடையும் இந்த மாநாடு இலங்கையின் புகழ்பெற்ற பேச்சாளர்களால் ஈர்க்கப்பட்டு அவர்களின் ஆர்வத்தையும் நோக்கத்தையும் மீண்டும் கண்டுபிடித்து அவரக்ளுக்கு உதவும், கூட்டுவணிக உலகம் மற்றும் நாடு முழுவதும் ஒரு உந்து சக்தியாகத் திகழும் வணிகத் தலைவர்கள் மற்றும் உயர்நிலை நிர்வாகிகள் உட்பட 2000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஈர்த்துள்ளது.

Special invitees with CA Sri Lanka officials

திரு. ஜகத் பெரேரா, மாநாட்டின் 40 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவது இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க சாதனை என்று கூறினார். 'இந்த ஆண்டின் மாநாடு எங்கள் உறுப்பினர்களைப் புத்தூக்கம் பெற உதவும், இதனால் அவரக்ள் முன்னேறத் தேவையான ஊக்கத்தைப் பெறுவதுடன், மேலும் தொழில்சார் மற்றும் தனிப்பட்ட மட்டத்தில் வெற்றியின் மிக உயர்ந்த உச்சத்தை அடைவார்கள்' எனவும் குறிப்பிட்டார்.

திரு. துலித்த பெரேரா, தேசிய மாநாடானது, பட்டய கணக்காளர்கள் மற்றும் நிதி சாராத தொழில் வல்லுநர்களை அதிக தொழில்சார் சாதனைகளை அடைய மாற்றும், ஊக்குவிக்கும் மற்றும் தூண்டுதலளிக்கும் ஒரு தளமாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டார். 'பட்டயக் கணக்காளர்கள் ஒவ்வொரு தொழிற்துறையிலும் உள்ள வணிகங்களின் வெற்றியை நோக்கிய செலுத்துனர்களாக இருப்பதுடன், பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்ட தொழில்முறை சமூகம் தொடர்ந்து தடைகளைத் தாண்டி எப்போதும் முன்னணியில் இடையூறு களைந்து புதுமைகளைத் தழுவிக்கொள்வதன் மூலம் அவரக்ள் கருமமாற்றும் பகுதிகளில் சிறப்பாக இருக்கிறாரக்ள்' என்று அவர் கூறினார்.

திரு. ரேஹ்மன் ஜி, மோஜோ தனிநபருடன் தொடங்கினாலும், அது தனிப்பட்ட மட்டத்திற்கு அப்பால் நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை உள்ளடக்கிய அடுத்த நிலைக்கு செல்கிறது என்று வலியுறுத்தினார். 'எங்கள் இறுதி நோக்கம் தொழில் வல்லுநர்களுக்குள் மந்திரத்தின் தீச்சுடரை மீண்டும் ஏற்றுவதும், அவர்களின் ஆர்வத்தையும் நோக்கத்தையும் மீண்டும் கண்டுபிடிப்பதற்கும், அவரக்ளின் வேலைகள் மீதான காதலை மீண்டும் உருவாக்கவும் உதவுதலாகும். இதனால் அவரக்ள் தொழில்முறை வெற்றியை அடைவார்கள், மேலும் அவர்கள் நிறுவனத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும்' என்றார்.