Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

நம்பிக்கையைப் புதுப்பிக்கவும் பட்டயக் கணக்காளர்களிடையே வலுச் சுடரை மீளேற்றவுமான இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் 40 வது தேசிய மாநாடு

கூட்டுவணிக அழுத்தம் மற்றும் நாளாந்த சலிப்புத்தன்மை மிக்க உலகில் பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்ட தொழில்சார் வல்லுநர்கள் களைப்படைந்துவிட்ட நிலையில், மேலும் வணிகங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கான சக்தியுடன் இலக்கு சார்ந்த தந்திரோபாய நிபுணர்களாக இருப்பதைத் தடுக்கும் ஓர்ஆழ்துளையினுள் அகப்பட்டுள்ளனர். இத்தகைய துன்பகரமான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம், நம்பிக்கையைப் புதுப்பிக்கவும் பட்டயக் கணக்காளர்களிடையே வலுச் சுடரை மீளேற்றவுமான வகையில் 40 வது தேசிய மாநாட்டினை முன்னெடுக்கவுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய வணிக உச்சி மாநாடு என அழைக்கப்படும் இந்த மாநாடு, 'உங்கள் உள்ளிணை சக்தியைக் கண்டறிதல்: சுய கண்டறிவின் பயணம்' (“Finding your Mojo: A Journey of Self Discovery”.) என்ற தலைப்பில் பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் உல்லாச விடுதியில் 2019 ஒக்டோபர் 14 முதல் 16 வரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருளானது இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் தலைவர் திரு ஜகத் பெரேரா, தேசிய மாநாட்டுக் குழுவின் தலைவர் திரு. துலித்த பெரேரா, தேசிய மாநாட்டு தொழில்நுட்பக் குழுவின் தலைவர் திரு மொய்ஸ் ரெஹ்மன்ஜி, அத்துடன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி துலனி பெர்னாண்டோ மற்றும் செயலாளர் திரு. பிரசன்ன லியனகே ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

From L to R: Chairman of the National Conference Committee Mr. Dulitha Perera, CA Sri Lanka President Mr. Jagath Perera, CEO Ms. Dulani Fernando and Chairman of the National Conference Technical Committee Mr. Moiz Rehmanjee at the theme unveiling of the 40th National Conference.

உள்ளிணைசக்தி (MOJO) என்பது வெளிப்புற வெற்றியை மாற்றியமைக்கும் உள்ளார்ந்த மந்திரம் என வரையறுக்கப்படுகிறது. இது தொழில்சார் வல்லுநர்கள் தங்கள் வாழ்க்கையிலும் தொழில்களிலும் மிக உயர்ந்த நிலையை அடைய இது உதவும் வகையில் கொண்டிருக்கும் ஆர்வம் மற்றும் கவனம் ஆகியனவாகும். இருப்பினும், எவரும் சூழ்நிலைகளுக்கு இரையாவதுடன், அதன் விளைவாக அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத சக்திகளிலிருந்து மீண்டெழ வேண்டியிருக்கும். நாட்டின் பிரபலமான வணிகத் தலைவர்கள் மற்றும் உயர்நிலை நிர்வாகிகள் சிலரையும் ஈர்க்கும் இந்த மாநாடு, பங்கேற்பாளர்களுக்கு அந்த மந்திரத்தின் தீப்பொறியைக் கண்டறிவதை ஆராய்வதற்கான ஒரு முக்கியமான தளத்தை வழங்குவதுடன், தமக்குள்ளும் தமது வணிக அமைப்புக்களுக்குள்ளும் அத்துடன் நாட்டினுள்ளும் அந்த ஆர்வத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும்.

இந்த மாநாடானது ஒக்டோபர் 14 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, பின்னர் ஒக்டோபர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில், முன்னுணர முடியாத உலகில், வெற்றியின் மிக உயர்ந்த உச்சத்திற்கு தங்களைத் தூண்டிக் கொண்ட வழக்கத்திற்கு மாறான சிந்தனையாற்றல் வழிமுறைகள் மூலமாக ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்ட குழுநிலைவிவாத உறுப்பினர்கள் அடங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பேச்சாளர்கள் மற்றும் ஒரு உயர்மட்ட குழுவின் பங்குபற்றலுடனான இரண்டு நாட்கள் தொழிற்திறன் அமர்வுகள் நடைபெறும்.

அதேவேளையில், அதிகரித்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பிரதான மாநாட்டு நிகழ்விடத்தின் வரையறுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை காரணமாக, ஏற்பாட்டாளர்கள், தொழில்நுட்ப அமர்வுகளின் நேரடி ஒளிபரப்பை கொழும்பின் கலதாரி உல்லாச விடுதியில் நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு மாநாடானது 2000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஈர்த்திருந்தது. மேலும், மூன்று நாள் நிகழ்வுகளும் இணையவழி ஒளிபரப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத பட்டயக் கணக்காளர்கள் மற்றும் பிற நிபுணர்களின் நலனுக்காக வழங்கப்படவுள்ளது.