Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

உயர்தர மாணவர்களிடையே முயற்சியாண்மைத் திறன்களை ஊக்கமளிக்கும் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் வணிகத் திட்டப் போட்டி

மின்னஞ்சல் Print PDF

வேலைவாய்ப்பின்மைக்குத் தீர்வாக, நாட்டின் பொருளாதார விருத்தியினைப் பலப்படுத்த உதவும் வகையில் முயற்சியாளர்களை இனங்காணும் முக்கிய படிமுறையாக, நாட்டின் மாணவர்களிடையே முயற்சியாண்மைத் திறன்களை ஊக்கமளிக்கும் முயற்சியில், இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் வணிக திட்டப் போட்டியின் மூன்றாவது பருவம், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும் வணிக திட்டப் போட்டி - 2019, நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளிடம் இருந்து, 2019 ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணங்களைக் கோருகின்றது.

இந்தப் போட்டி 2019/2020 ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வணிகத் துறை மாணவர்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. போட்டியில் பங்குபற்றும் ஆர்வத்தினைக் கொண்ட பாடசாலைகள், இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்துக்கு தமது விண்ணப்பங்களை 2018 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் சமர்ப்பிக்க முடியும். நான்கு மாணவர்களை உள்ளடக்கி. போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு அணியும், தமது வணிகத் திட்டத்தினை நடுவர்கள் முன்னிலையில் ஆங்கில மொழி மூலம் பிராந்திய மற்றும் தேசிய மட்டத்தில் முன்னிலைப்படுத்தல் வேண்டும்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய வணிகக் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் QUT வணிகப் பாடசாலையானது 2019 போட்டியின் தந்திரோபாய பங்காளர்களாக மீளவும் இவ்வருடம் இணைந்து கொள்கின்றது. இலங்கைப் போட்டியின் இறுதிக் கட்டத்தின் வெற்றியாளர்கள் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் 2019 மே மாதம் இடம்பெறவுள்ள BlueShift ஆய்வுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா அழைத்துச் செல்லப்படுவர்.

ஊடக மாநாடு ஒன்றில் பேசும்போது, இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் தலைவர் திரு. ஜகத் பெரேரா அவர்கள், இலங்கையானது தனித்துவமான தூரநோக்கு கொண்ட முயற்சியாளர்கள் மூலம் தலைமை வழங்கப்படும் ஒரு புத்தாக்க மயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தினை நோக்கி மாற்றமடைவதனை உறுதி செய்வதற்கான கூட்டுப் பொறுப்பு இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் முதலிய தொழில்சார் அமைப்புகளிடையே உள்ளதாகக் குறிப்பிட்டார். 'பாரம்பரிய பெறுமதிச் சங்கிலிகள் கூட வலுவிழக்கும் சிக்கல் நிறைந்த இந்த யுகத்திலே, நாம் எமது எல்லைகளை கடந்து சிந்தித்து புத்தாக்கங்களை உருவாக்குதல் அவசியமாகும். அதற்காக இவ்வாறான திறன்களின் முக்கியத்துவத்தை மிகவும் இள வயதிலேயே வலுவளித்தல் வேண்டும்' என அவர் குறிப்பிட்டார்.

QUT வணிகப் பாடசாலையின் உப பீடாதிபதி திரு. அன்ட்ரூ பால்ட்ரிஜ் அவர்கள், பல ஆண்டு காலமாக QUT வணிகப் பாடசாலையானது, போட்டிகளை பயன்படுத்தி அவற்றின் மூலம் அனைத்து மட்டங்களிலுமுள்ள மாணவர்களிடையே வணிகத் திறன்களை விருத்தி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனக் கூறினார். QUT பல்கலைக்கழகம் இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்கள் மிகப்பெரும் சர்வதேச வணிகக் கள ஆய்வுப் போட்டிகளை நடாத்தி வருவதுடன் உயர் பாடசாலைகளிடையே பாரிய டீடரநளூகைவ போட்டியையும் நடத்துகிறது. 'மீண்டும் ஒருமுறை இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் மற்றும் இலங்கை அவுஸ்திரேலியா வணிகக் கழகத்துடன் இணைந்து மீண்டும், மூன்றாவது வருடமாகவும் வணிகப் போட்டியின் ஒரு பங்காளராக இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளும் QUT வணிகப் பாடசாலை, இலங்கையில் இடம்பெறும் போட்டியில் வெற்றி பெறும் பாடசாலை அவுஸ்திரேலியாவில் உயர் பாடசாலைகளிடையே இடம்பெறும் BlueShift வணிகக் கள ஆய்வுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா வருவதற்கான அனுசரணையை வழங்கும்' எனவும் அவர் கூறினார்.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் முன்னைய வணிகத் திட்டப் போட்டியின் வெற்றியாளர்களான மகாமாயா பெண்கள் பாடசாலை மற்றும் ஆனந்தா ஆண்கள் கல்லூரி ஆகியன, உள்நாட்டில் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெறுவதற்கான முழு இயலுமையை கொண்டிருந்ததுடன், அவுஸ்திரேலியா பயணித்து டீடரநளூகைவ வணிகப் போட்டியில் பங்குபற்றியதுடன் மாத்திரமன்றி, பல்வேறு சமூக மற்றும் தொழில்சார் விருத்தி செயற்பாடுகளில் பங்குபற்றியிருந்தனர் எனறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அவுஸ்திரேலிய வணிக கழகத்தின் தலைவர் திரு கெலும் டி சில்வா அவர்கள், தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் இலங்கை பட்டய கணக்கறிஞர் நிறுவகம் மற்றும் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியன வணிக திட்டப் போட்டியினை நடாத்துவதில் ஓர் பங்காளராக இணைந்து கொள்வதையிட்டு, வணிக கழகமானது மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். 'இந்த வருடம் இந்த போட்டியானது நாடு முழுவதும் உள்ள 130 பாடசாலைகளின் எதிர்பார்க்கப்பட்ட பங்குபற்றுதலுடன் மற்றொரு கட்டத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது எமது எதிர்கால சந்ததியின் இயலுமைகளை வலுப்படுத்துவதற்கு மாத்திரமன்றி, நாம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளின் கல்வி நிறுவனங்களிடையே ஒரு மிகச்சிறந்த உறவுமுறையினைக் கட்டியெழுப்புவதற்கும் மிகவும் உதவி புரியும். இவ்வருடம் வெளிப்படுத்தப்படவுள்ள திறமைகளை காண்பதற்காக நாம் மிகவும் ஆவலாக உள்ளோம்' எனவும் திரு டி சில்வா குறிப்பிட்டார்.

ஊடக மற்றும் தொடர்பாடல் குழுமத்தின் தவிசாளர் திரு. லக்னாத் பீரிஸ் அவர்கள், இலங்கை மிகவும் திறன்வாய்ந்த மக்களைக் கொண்டுள்ள போதும், முயற்சியாளர்களுக்கான கடுமையான பற்றாக்குறையினை எதிர்கொள்வதாகக் எனக் கூறினார். 'இலங்கையானது உயர் நடுத்தர வருமான மட்டத்தை நோக்கி நிலைமாறும் இக்கட்டத்தில் மாற்றங்களை உருவாக்கி இலங்கையினை ஓர் பூகோள முக்கிய பங்காளராக்கும் இலக்கினைத் துரிதப்படுத்தும் கூடுதலான் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான தேவைப்பாடு, மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது' எனவும் 'இந்த நோக்கத்தை மனதில் கொண்டு இலங்கை அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தூரநோக்கு மிக்க முயற்சியாளர்களை உருவாக்கும் ஒவ்வொரு சாத்தியமான முயற்சிகளுக்கும் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் மேற்கொள்கிறது' எனவும் திரு. பீரிஸ் குறிப்பிட்டார்.

புகைப்பட தொகுப்பு:

CA Sri Lanka President Mr. Jagath Perera addressing the media.

President of SLACC Mr. Kalum De Silva.

Chairman of the Media & Communication Committee Mr. Laknath Peiris.

Assistant Dean (International) of the QUT Business School Mr. Andrew Paltridge.

Head Table (From Left to Right) - CA Sri Lanka Secretary Mr. Prasanna Liyanage, Assistant Dean (International) of the QUT Business School Mr. Andrew Paltridge, CA Sri Lanka President Mr. Jagath Perera, Chairman of the Media & Communication Committee Mr. Laknath Peiris and President of SLACC Mr. Kalum De Silva
Last Updated on Friday, 14 September 2018 04:43