Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

தெற்காசியாவில் முதன்முறையாக குறித்துரைக்கப்பட்ட தாளாண்மையல்லாத உரிமங்களுக்கான, இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் கணக்காய்வு நியமங்கள்

குறித்துரைக்கப்பட்ட தாளாண்மையல்லாத உரிமங்களுக்கான இலங்கைக் கணக்காய்வு நியமங்கள், 30 ஆகஸ்ட் 2018 வியாழன் அன்று இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் அங்கத்தவர் கலந்துரையாடல் மண்டபத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

வெளியீட்டின் பிரமத விருந்தினரான கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்கள் தெற்காசியாவில் குறித்துரைக்கப்பட்ட தாளாண்மையல்லாத உரிமங்களின் நன்மைக்காக கணக்காய்வு நியமங்களை வெளியிட்ட முதலாவது நாடாக இலங்கையை உருவாக்கிவதன் மூலம் ஒரு முக்கிய வரலாற்றுத் தடத்தைப் பொறித்தமைக்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினைப் பாராட்டினார். அவர் 'இந்த நியமத்தை உருவாக்கிய தெற்காசியாவின் முதலாவது நாடு என்னும் வகையில் நாம் ஒரு முக்கிய வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளோம் ' எனக் குறிப்பிட்டார்.

புதிய நியமத்தை உருவாக்கியதற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தை பாராட்டியதுடன் அமைச்சர் அவர்கள் 'இந்த நியமத்தை உருவாக்கியது, சிறிய நடுத்தர அளவு உரிமங்கள் உள்ளடங்கலான நாட்டின் முறைசாரா துறையினைப் பூகோள சந்தைகளுடன் இணைப்பதில் ஒரு முக்கிய கட்டமாகும்' எனவும் குறிப்பிட்டார்.

'சிறிய நடுத்தர அளவு உரிமங்கள் பொருளாதார விருத்தி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மிக முக்கியமான வகிபாகத்தினை வகிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பகுதியாக திகழ்கிறது. நாம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மூன்று பேருக்கு குறைவான ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ள சிறிய நடுத்தர அளவு உரிமங்களைக் கொண்டுள்ளோம். பதிவு செய்யப்படாத சிறிய நடுத்தர அளவு உரிமங்களையும் கருத்தில் எடுக்கும்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் முக்கியத்துவம் மிகத் தெளிவானது' என கௌரவ பதியுதீன் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர் இலங்கையின் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்களை வழங்குவதற்கான அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பான பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தை சமூக வணிகமுயற்சிகள் என அடையாளம் காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தின் புதிய முறைசாரா உப துறையினை அவற்றின் உள்ளடக்கத்தினுள் நோக்காகக் கொண்டிருக்க வேண்டுமென ஊக்குவித்தார்.

'இந்த கணக்காய்வு நியமம் மிக நீண்ட கால தேவைப்பாடாக இருந்து வந்துள்ளது. ஆகையால் கணக்காய்வு பயிற்சியாளர்கள் இந்த முக்கியமான புத்தாக்க முயற்சிக்கு தமது ஆதரவை வழங்குவதுடன் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் சிறிய நடுத்தர அளவு உரிமங்கள் மற்றும் சிறிய நடுத்தர கணக்காய்வு பயிற்சியாளர்கள் ஆகிய துறைகள் தொடர்பாக மேற்கொள்ளும் பல்வேறு கட்டங்களுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டும்' எனவும் கௌரவ பதியுதீன் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பேசும்போது இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் தலைவர் திரு. ஜகத் பெரேரா அவர்கள் குறித்துரைக்கப்பட்ட தாளாண்மை அல்லாத உரிமங்களுக்காக ஒரு தனியான கணக்காய்வு நியமம் உருவாக்கப்படுவது இதுவே முதல் தடவை எனக் கூறினார். 'இத்தகையதோர் நியமத்திற்கான தேவையானது பல ஆண்டுகளாக காணப்பட்டு வந்துள்ளது. ஆனால் இத்தகைய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யத்தக்க எந்த ஒரு நியமமும் காணப்படாத காரணத்தால் இத்தகையதோர் நியமத்தை உருவாக்குவதை நியாயப்படுத்துவதற்கான போதுமான பொறிமுறைகள் எம்மிடம் காணப்பட்டிருக்கவில்லை' என அவர் குறிப்பிட்டார்.

'எவ்வாறாயினும், இந்த முயற்சியின் பின்புலத்தில் புத்தாக்க நிபுணராக தொழிற்பட்ட நிறுவகத்தின் முன்னாள் தலைவர் திரு லசந்த விக்ரமசிங்க அவர்கள் நோர்டிக் நாடுகளில் இதுபோன்றதொரு நியமம் பயன்பாட்டில் உள்ளதனை ஒன்றுகூடல் ஒன்றின் மூலம் அறிந்து கொண்டார். ஆகவே அதனை ஓர் வழிகாட்டியாக பயன்படுத்தி, ஆனால் முற்றுமுழுதாக உள்நாட்டின் தொழிற்திறன் அணியினரால் முழுமையாக இந்த இலங்கைக் கணக்காய்வு நியமம் உருவாக்கப்பட்டது' என திரு. பெரேரா அவர்கள் மேலும் கூறினார்.

'மேலும் அவர் குறிப்பிடும் பொழுது கணக்காய்வு உலகிலே நாளாந்தம் புதிய புதிய நியமங்கள் உருவாகுவதுடன் கணக்காய்வுக்கான தேவைப்பாடு தொடர்ச்சியாக விரிவடைந்து வருகின்றது. இந்த நியமம் கூட எப்பொழுதுமே நிலைத்து நிற்கப் போவதில்லை, அதற்கு பதிலாக தேவைப்பாடு ஏற்படுமிடத்து அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அது மேம்படுத்தப்படும். அனைத்து நியமங்களும் தேவைப்பாடுகளுக்கு ஏற்ற வகையில் மீளாய்வு செய்யப்பட்டு
மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதே எமது உச்ச இலக்கு ஆகும் ' எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும் போது திரு. பெரேரா அவர்கள் 'கணக்கீட்டு தொழிலானது சில புரட்சிகரமான மாற்றங்கள் ஊடாக பயணிக்கிறது. ஆகையால் இந்த மாற்றங்கள் தொழிற்துறையில் மேம்பட்டு காணப்படுவதனை இறுதி இலக்காகக் கொண்டுள்ளமையால், அனைவரும் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுதல் அவசியமானதாகும். நாம் மாற்றம் அடையாவிட்டால் மாற்றம் எம்மை மாற்றும். ஆகையால் நாம் மாற்றமடைதல் அவசியமானது' என குறிப்பிட்டார்.

'தன்னியக்க மயப்படுத்தலானது இலகுவானதாகவும் கிரய சிக்கனமானதாகவும் காணப்படுவதனால் கணக்காய்வினைத் தன்னியக்கமயப்படுத்துதல் தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு தீர்வை உருவாக்குமாறு ஏற்கனவே நான் ஒரு குழுவினை நியமித்து இருக்கிறேன் ' எனக் கூறினார்.

சிறிய நடுத்தர கணக்காய்வு பயிற்சியாளர்களின் செய்முறைப் படையின் தற்போதைய தலைவர் திரு. லசந்த விக்ரமசிங்க அவர்கள், இந்த நியமத்தை உருவாக்குவதற்கான தாம் பல்வேறு கட்டங்களிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டிக் காணப்பட்டதாகக் கூறினார். 'நாம் கலந்துரையாடல்கள், விவாதங்கள் மற்றும் முன்மொழிவுகளை உருவாக்குவதற்காக ஏறத்தாழ 20 அமர்வுகளில் பங்குபற்ற வேண்டியிருந்தது. வரலாற்றில் முதல் தடவையாக இதனை மேற்கொள்வதனால், அது ஓர் இலகுவான காரியமாக இருக்கவில்லை. இந்தியா தமது முழுமையான முயற்சியில் ஈடுபட்டது, பாகிஸ்தான் முயற்சித்தது, ஆனால் இன்னமும் அவர்கள் முடிவின்றித் தவிர்க்கிறார்கள்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும், 'இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் சிறிய நடுத்தர அளவு உரிமங்களின் கணக்காய்வு சட்டகம் ஒன்றை உருவாக்கியமைக்காக, இந்த நியமத்தின் முழுமையான உருவாக்கம் மற்றும் அதற்கான தூரநோக்கு ஆகியவற்றுக்காக, உப குழுமத்தின் தலைவரான திரு சனத் பிரனாந்து மற்றும் அவரது அணியினருக்கு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தினார்.'சனத் மற்றும் அவரது அணியினருக்கு எனது விசேட நன்றிகள். இந்தப் பிராந்தியத்தின் மிகச்சிறந்த திறமைகளை நாம் கொண்டிருக்கின்றோம்' என அவர் மேலும் கூறினார்.

புகைப்பட தொகுப்பு:

The first copy of the Auditing Standard (SLAuS) for the Audits of Non- Specified Business Enterprises (Non- SBEs) being presented to Minister of Industry and Commerce Rishad Bathiudeen by Chairman of the SMP Task Force Mr. Lasantha Wickremasinghe in the presence of CA Sri Lanka President Mr. Jagath Perera and Chairman of the Sub-Committee to Develop an Audit Framework for SME Audit Mr. Sanath Fernando.