Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

பட்டயக் கணக்கறிஞர்களின் துணிகரமான முன்னகர்வு மற்றும் நிலைகொள்ளலுக்கு ஊக்கமளிக்கும் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் 39ஆவது தேசிய மாநாடு

இலங்கையின் மிகப்பெரும் வருடாந்த வணிகக் கூட்டத் தொடரான, இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் ஒழுங்கமைக்கப்படும், பட்டயக் கணக்கறிஞர்கள் தேசிய மாநாடானது பட்டயக் கணக்கறிஞர்களை அதிகரித்துச் செல்லும் வணிக உலகின் கடினத்தன்மைகளுக்கு, ஈடுகொடுத்து நிலைகொள்ளும் வகையிலான முன்னகர்வு ஒன்றுக்கு உந்துதலளிக்கும் வகையில் அரங்கம் காண்கிறது.

"உயர்நிலை முன்நகர்வு" என்னும் கருப்பொருளுடனான 39 ஆவது தேசிய மாநாடானது, சவால்களை எதிர்கொண்டு தொழில்நுட்பம், குடியியல் மற்றும் பொருளாதார மாற்றங்களினால் ஸ்தம்பிதம் அடையாது, துணிகரமான முன்னகர்வினை மேற்கொள்வதற்கான தேவைப்பாட்டினைத் தெளிவுபடுத்தும் வகையில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஒக்டோபர் மாதம் 08ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த மாநாடு தொழில்நுட்ப நிச்சயமின்மைகள், எதிர்கால மனிதவள சவால்கள் மற்றும் பூகோள பொருளாதார மாற்றங்கள் ஆகியவை தொடர்பான நோக்கினைக் கொண்டு இருக்கும் அதேவேளை வணிகங்களை உயர்நிலைக்கு இட்டுச் செல்வதில் கணக்காளர்கள் ஆற்றிய முக்கிய பங்கு மற்றும் அவர்கள் பொருத்தமானவர்களாக தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஆற்றவேண்டிய வகிபாகம் ஆகியவற்றினையும் முக்கியத்துவப்படுத்தும்.

இந்த வருடத்திற்கான மாநாட்டின் கருப்பொருளை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாடு ஒன்றிலே பேசும் போது, இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தின் தலைவர், திரு. ஜகத் பெரேரா அவர்கள், கணக்கீட்டு உயர்தொழில் உள்ளடங்கலான தொழில்சார் சமூகத்திலே தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தியுள்ள படிநிலை மாற்றங்கள் தொடர்பில் முக்கியத்துவப்படுத்தினார். 'ஒரு உயர்தொழில் என்ற வகையில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கடினத்தன்மை ஆகியன விசேட தரம் வாய்ந்த தொழில்சார் நபர்களாக தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்காக புதிய போக்குகள், தொழில்நுட்பங்கள், முறையியல் விடயங்களை பின்பற்றுவதற்கான தேவைப்பாட்டினைப் புதுப்பித்துள்ளது. இதன் காரணமாகவே, இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் தமது அங்கத்தவர்கள் தராதரம் மிக்கவர்களாக மாத்திரமன்றி, இன்றைய உலகின் மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப முன்னகர்ந்து, நிலைத்துநிற்கும் அடித்தளத்தை உருவாக்கும் புதிய முயற்சிகளில் தலைமை வகித்து வருகின்றது.' எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டின் தேசிய மாநாடானது, வணிகத் தலைவர்கள், உயர் வகுப்பு நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உயர்நிலை தொழில்சார் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 1700 பங்குபற்றுனர்களை உள்ளீர்த்திருந்தது. கடந்த காலங்களைப் போலவே இம் முறையும் நிறுவகமானது மாநாட்டு நிகழ்வுகளை கடல்கடந்து வாழும் பட்டயக் கணக்கறிஞர் அங்கத்தவர்களது நன்மை கருதி இணையவழி ஒளிபரப்பை மேற்கொள்ளவுள்ளது. இரு தின தொழிற்திறன் அமர்வுகள் உள்ளடங்கலான இம் மூன்று நாள் மாநாடானது நமது தொழில்சார் வாழ்க்கைப் பயணத்தில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னகர்ந்து, தொழிற்துறையில் நிலைத்து நின்று துணிகரமான புத்தாக்கங்களை மேற்கொள்வதில் கைதேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேச்சாளர்கள் மற்றும் குழு நிலை கலந்துரையாடல் அங்கத்தவர்களை ஒன்றிணைக்கும்.

ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது தேசிய மாநாட்டுக் குழு தலைவர் திரு, துலித்த பெரேரா அவர்கள், பொருளாதார விருத்தியை ஏற்படுத்துவதிலே பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் பட்டய கணக்காளர்கள் ஒப்பற்ற பங்களிப்பினை வழங்கி இருப்பதாக குறிப்பிட்டார். 'அவர்கள் தந்திரோபாய தீர்மானம் மேற்கொள்ளும் வகையில் பணிப்பாளர் சபைக்கூட்ட அமர்வுகளில் பங்களிப்பு வழங்கத்தக்க முறையில் வலுவளிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே பட்டயக் கணக்காளர்கள் தமது தோள்களில் மிகப்பெரும் பொறுப்புகளை சுமக்கின்றனர். அங்கத்தவர்கள் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றம் அடைவதுடன் பொருத்தமான வகையில் நிலைப்பதற்காக சவால்களுக்கு ஈடுகொடுத்து தமது நிறுவனங்களுக்கும் இந்த நாட்டுக்கும் பெறுமதி சேர்ப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னிலை வகித்தல் எமது கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில், தேசிய மாநாட்டு குழுமத்தின் தலைவர், வணிக உலகின் தவிர்க்க முடியாத பகுதியாக சவால்கள் மற்றும் கடினத்தன்மை ஆகியன உள்ளன. எதிர்காலத்தின் தேவைப்பாடு என்ன என்பதனை சரியாக முன்னுணரும் வகையில் பட்டயக் கணக்காளர்கள் தூரநோக்குள்ள சிந்தனையாளர்களாவதுடன், அதன்மூலமாக அவசியமான திறன்கள் மற்றும் அறிவினைப் பெற்றுக் கொண்டு, புதிய சவால்களை எதிர்கொள்ள தக்கவகையில் மாற்றம் அடைவதுடன் விருத்தி பெறவும் வேண்டும். அந்த வகையில் தேசிய மாநாடு பட்டயக் கணக்காளர்கள் புதிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை தமது சிந்தனைகளை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் ஒரு நிலைப்பட்ட சிந்தனையை மேற்கொள்ளவும் மிகவும் பொருத்தமான தனித்துவமான விடயங்களில் நோக்கினை செலுத்துவதற்கான ஒரு தீர்க்கமான அடித்தளமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தேசிய மாநாட்டின் தொழில்துறை குழுமத்தின் தலைவர் திரு. மொய்ஸ் ரெஹ்மான்ஜி அவர்கள், இந்த ஆண்டுக்கான மாநாட்டு கருப்பொருளினைத் தெளிவுபடுத்தும் போது, தொழிற்துறையின் அங்கத்தவர்கள் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக பின்னடைவு காண்பதில்லை, ஆனால் அதற்குப் பதிலாக அவற்றை வாய்ப்புகளாக மாற்றி பயன்படுத்துவதில் முன்னிலை அடைந்தல் முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் "உயர்நிலை முன்னகர்வு" என்னும் கருப்பொருளை குழுமம் தெரிவு செய்ததாக கூறினார். தொழில் சார்ந்தவர்கள் என்ற வகையில் வகையில் முன்செல்லுதல் வேண்டும். மாறாக தொடர்ச்சியாக மாற்றமடையும் தொழில்நுட்பம் மற்றும் குடியியல் மாற்றங்களின் காரணமாக தடைப்பட்டு விடுதல் ஆகாது. சவால்களை எதிர்கொண்டு அவற்றை வாய்ப்புகளாக மாற்றியமைத்து துணிகரமாக முன்னோக்கி நகர்வதற்குத் தயார்ப்படுத்தல் வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் அவர் 'பாரம்பரிய வணிக மாதிரிகளின் பின்னடைவு காரணமாக, நவீன தொழில்நுட்ப மாற்றம், மனிதவள மற்றும் பொருளாதார வளர்ச்சி மாற்றங்கள் என்பவற்றின் காரணமாக, பட்டயக் கணக்காளர்கள் எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கான திறன்கள் மற்றும் அனுபவத்துடன் தம்மைத் தயார்படுத்தி நிறுவனங்களில் செயற்படுகின்றனர். நாம் கொண்டுள்ள திறன்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை பின்பற்றவும் முன்மாதிரிகளை உருவாக்கி வாய்ப்புக்களை உச்ச படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன' எனவும் குறிப்பிட்டார்.

புகைப்படங்கள்:

President of CA Sri Lanka Mr. Jagath Perera delivering the welcome speech.

Chairman of the National Conference Committee Mr. Dulitha Perera addressing the media.

Chairman of the National Conference Technical Committee Mr. Moiz Rehmanjee explaining the rationale behind this year’s conference theme ‘Hyperleap’.

Head Table (From left to right) - Chairman of the National Conference Committee Mr. Dulitha Perera, President of CA Sri Lanka Mr. Jagath Perera, Chairman of the National Conference Technical Committee Mr. Moiz Rehmanjee and Secretary of CA Sri Lanka Mr. Prasanna Liyanage.
அதேவேளை, தேசிய மாநாட்டின் தொழில்துறை குழுமத்தின் தலைவர் திரு. மொய்ஸ் ரெஹ்மான்ஜி அவர்கள், இந்த ஆண்டுக்கான மாநாட்டு கருப்பொருளினைத் தெளிவுபடுத்தும் போது, தொழிற்துறையின் அங்கத்தவர்கள் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக பின்னடைவு காண்பதில்லை, ஆனால் அதற்குப் பதிலாக அவற்றை வாய்ப்புகளாக மாற்றி பயன்படுத்துவதில் முன்னிலை அடைந்தல் முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் "உயர்நிலை முன்னகர்வு" என்னும் கருப்பொருளை குழுமம் தெரிவு செய்ததாக கூறினார். தொழில் சார்ந்தவர்கள் என்ற வகையில் வகையில் முன்செல்லுதல் வேண்டும். மாறாக தொடர்ச்சியாக மாற்றமடையும் தொழில்நுட்பம் மற்றும் குடியியல் மாற்றங்களின் காரணமாக தடைப்பட்டு விடுதல் ஆகாது. சவால்களை எதிர்கொண்டு அவற்றை வாய்ப்புகளாக மாற்றியமைத்து துணிகரமாக முன்னோக்கி நகர்வதற்குத் தயார்ப்படுத்தல் வேண்டும் எனவும் கூறினார்.