Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

சிறந்த ஆண்டறிக்கைகளைக் கௌரவிப்பதற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் 54ஆவது ஆண்டறிக்கை விருதுகள் போட்டிக்காக மேற்கொள்ளும் அழைப்பு

நாட்டிலே தயாரிக்கப்படும் மிகச்சிறந்த மற்றும் அதிதிறமை வாய்ந்த ஆண்டறிக்கைகளுக்கு முடி சூடும் ஒரு முயற்சியாக, இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகமானது அதனுடைய 54வது ஆண்டறிக்கை விருதுகள் போட்டிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது

இந்த வருடம் இப்போட்டியானது 'திறமைகளின் உச்சவடிவம்' என்னும் கருப்பொருளின் அடிப்படையில் புதுமை கொண்டு, சிறந்த ஆண்டறிக்கைகள் இவ்வாண்டின் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள பிரமாண்ட நிகழ்வில் பெருமைப்படுத்தப் படவுள்ளன. இந்தப் போட்டியானது நிறுவனங்கள் தமது தொழிற்பாடுகளை பிரதிபலிக்கக் கூடிய வகையில் தயாரிக்கும் அறிக்கைகளின் நிலைத்த தன்மை, தெளிவான தன்மை மற்றும் பயனாளர்களுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்ட தன்மை ஆகிய இயல்புகளுடன் அமைந்த, அவற்றின் சட்டரீதியான அறிக்கையிடல் தேவைப்பாடுகளின் நிறைவேற்றத்துக்கும் மேலாக, வெளிப்படைத்தன்மை, கணக்களிதகமை மற்றும் சிறந்த ஆளுகை ஆகியவற்றினை மேம்படுத்தும் ஆண்டறிக்கைகளுக்கு வெகுமதி அளிக்கவுள்ளது.

அரை நூற்றாண்டு காலப் பகுதிக்கு மேலான வரலாற்றைக் கொண்ட, நாட்டின் கூட்டு வணிக நிறுவனங்களுக்கிடையிலான மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக ஏற்கப்பட்ட இந்த ஆண்டறிக்கைப் போட்டியானது பல்தேசிய கம்பனிகள் கூட்டுக் கம்பனிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், பொதுத்துறை அல்லாத அமைப்புகள் மற்றும் சிறிய நடுத்தர உரிமங்கள் முதலான வணிக அமைப்புகளுக்கு, அவற்றின் நிதி அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணக்களி தகமையை மேம்படுத்தவும் இலங்கையின் அறிக்கையிடல் நியமங்களை பூகோள நடைமுறைகளுக்கு இணக்கமான வகையில் உயர்த்துவதற்கும் ஒரு முக்கியமான அடித்தளம் ஒன்றினை அமைத்துள்ளது.

54ஆவது ஆண்டறிக்கை விருதுகள் போட்டியின் விண்ணப்பங்கள் 31 ஆகஸ்ட் 2018 திகதியுடன் முடிவுக்கு வரும். இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகமானது 31 டிசம்பர் 2017 மற்றும் 31 மார்ச் 2018 ஆகிய தினங்களில் முடிவடைந்த ஆண்டுகளுக்கான நிதிக்கூற்றுக்களுக்குரிய ஆண்டறிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் தலைவர் திரு. ஜகத் பெரேரா அவர்கள், நாட்டினுடைய தேசிய கணக்கியல் அமைப்பு என்ற வகையில் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் இலங்கையின் வணிக அமைப்புகள் பூகோள தேவைப்பாடுகளுக்கு இணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் ஒரு முன்னிலை அமைப்பாக தொழிற்படுகிறது எனக் குறிப்பிட்டார். 'அத்தகைய சூழ்நிலையில் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டறிக்கை விருதுகள் போட்டியானது இலங்கையினுடைய வணிக அமைப்புகள் நிலைத்த தன்மைவாய்ந்த தெளிவான மற்றும் சட்டத் தேவைப்பாடுகளுக்கும் மேலான தன்மை வாய்ந்த வாய்ந்த உயர்தரமான ஆண்டறிக்கைகளைத் தயாரிப்பதை மேம்படுத்தும் ஒரு முக்கியமான போட்டி என்னும் கௌரவத்தினை கட்டி எழுப்பி உள்ளது' எனக் கூறினார்.

இலங்கையானது உயர் நடுத்தர வருமான அந்தஸ்தினை எட்டும் இலக்கில் தொடர்ந்து செல்லும் ஒரு நாடு என்ற வகையில், அபிவிருத்தி அடைந்து வரும் தேசம் ஒன்றுக்கான முக்கிய தேவைப்பாடுகளான வெளிப்படைத்தன்மை, கணக்களி தகமை மற்றும் சிறந்த ஆளுகை ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம்தொழில்சார் சமூகங்கள் மற்றும் கூட்டு வணிக அமைப்புக்கள் நாட்டினுடைய முன்னோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய பங்கினைக் கொண்டிருக்கின்றன என்பதை திரு. பெரேரா குறிப்பிட்டிருந்தார்.

"துல்லியமான நிதி அறிக்கையிடலானது கம்பனி மற்றும் நாடு ஆகிய இரண்டின் மீதும் ஒரு முக்கிய பங்கினை ஆற்றும் என்பதால், இப் பயணத்திலேயே உயர்ந்த பூகோள நியமங்களுக்கு இணக்கமாக, துல்லியமான மற்றும் வெளிப்படைத் தன்மை வாய்ந்த ஆண்டறிக்கைகள் தயாரித்தல் எந்த ஒரு நிறுவனத்திலும் வணிக உலகில் அதன் தகமை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாது அதன் நிகழ்ச்சி நிரலில் முதன்மையானதாக காணப்படுதல் வேண்டும்" என திரு. பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

ஆண்டறிக்கைகள் விருதுகள் குழுமத்தினுடைய தவிசாளர் திரு. ஹேஷன குருப்பு அவர்கள் உரையாற்றும் போது, இப்போட்டியானது வருடாவருடம் அடைந்துவரும் வளர்ச்சியின் மூலம் இப்போட்டிக்கான முக்கியத்துவமானது சான்று கூறப்பட்டுள்ளது என விளக்கினார். அவர் மேலும் குறிப்பிடும் பொழுது 'இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகமானது போட்டிக்கு தொடர்புபட்டதன்மையினை உறுதி செய்யும் வகையில் புதிய கணக்கீட்டு நியமங்கள் மற்றும் அவை தொடர்பான வியாக்கியானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியான முறையில் புள்ளியிடல் திட்டத்தினை புதுப்பித்துக் கொள்வதற்கான ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்கிறது' எனக் குறிப்பிட்டார்.

"துல்லியமாக குறித்துரைக்கப்பட்ட ஆண்டறிக்கையானது நாட்டினுடைய மூலதனச் சந்தையை அபிவிருத்தி செய்கிறது, ஆகையால் தகவல் கிடைப்பனவினை தெளிவான முழுமையான மற்றும் துல்லியமான முறையில் உறுதி செய்தலானது, பங்குதாரர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் உள்ளடங்கலான அக்கறையுள்ள தரப்பினருடைய தகவல் அளிக்கப்பட்ட முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முக்கியம் வாய்ந்ததாகும் " என திரு. குருப்பு மேலும் கூறினார்.

"பாரிய ப்ளு சிப் கம்பெனிகள் முதல் சிறிய காலம் குறித்த இலாப நோக்கற்ற அமைப்புகளும் தொடர்ச்சியான முறையில் வருடாந்த கூட்டு வணிக அறிக்கையிடல் சிறந்த நடைமுறைகள் தொடர்பாக தமது ஈடுபாட்டினை காட்டி வருகின்றமை மிகவும் மகிழ்ச்சியானதொரு விடயமாகும். இலங்கையில் ஆண்டறிக்கைகளை தயாரிக்கும் வணிக அமைப்புகள் இந்த போட்டியில் பங்குபற்ற வேண்டும் என நான் ஊக்கம் அளிப்பதுடன் அதன் மூலம் வணிகத்தின் முக்கியமான பகுதிகளான வெளிப்படைத்தன்மை, கணக்களி தகமை மற்றும் சிறந்த ஆளுகை ஆகியவற்றினை மேம்படுத்தும் ஒரு பொறுப்பு வாய்ந்த வணிகம் என தம்மை உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்" என திரு. குருப்பு மேலும் கூறினார்.

இலங்கையில் ஆண்டறிக்கைகள் தயாரிக்கும் எந்த ஒரு அமைப்பும் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் ஆண்டறிக்கை விருதுகள் போட்டியிலே பங்குபற்ற முடியும். வங்கியியல் நிறுவகங்கள், அரச வங்கிகள், பன்முகப்படுத்தப்பட்ட குழுமக் கம்பனிகள், நிதிக் கம்பனிகள், குத்தகைக் கம்பனிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள், உணவு மற்றும் குடிபான கம்பனிகள், சுகாதார சேவை நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், உல்லாச விடுதி கம்பனிகள், காப்புறுதிக் கம்பனிகள், நிலம் மற்றும் மெய்ச்சொத்து கம்பனிகள், உற்பத்திக் கம்பனிகள், மோட்டார் வாகனக் கம்பனிகள், சேவை அமைப்புகள், தொலைத்தொடர்பாடல் அமைப்புக்கள், அலகுப் பொறுப்பாட்சி நிறுவனங்கள், ஊடக மற்றும் பொழுதுபோக்கு கம்பனிகள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவியல் சபைகள், பெருந்தோட்ட கம்பனிகள், கட்டட நிர்மாண கம்பனிகள், வலு மற்றும் சக்தி கம்பனிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளடங்கலான இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தர அளவிலான உரிமங்கள் ஆகியன உள்ளடங்கலான 25 துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கால சமூகக் குழுக்கள் முதல் பாரிய அளவான கூட்டு கம்பனிகள் வரையான வியாபார அமைப்புகள் இந்த ஆண்டு போட்டியில் விண்ணப்பிக்க முடியும்.

சகலதுறை வெற்றியாளர்கள் மற்றும் ஒவ்வொரு துறைசார் வெற்றியாளர்கள் ஆகியோருக்கு மேலதிகமாக, இப்போட்டியானது கூட்டாண்மை வெளிப்படுத்துகை, கூட்டு சமூகப் பொறுப்பு அறிக்கையிடல், முகாமைத்துவ கருத்து வழங்கல், ஒருங்கிணைந்த அறிக்கையிடல், ஒருங்கிணைந்த அறிக்கையிடல் - மூலதன முகாமைத்துவ சிறந்த வெளிப்படுத்துகை மற்றும் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் - வணிக மாதிரி மீதான சிறந்த வெளிப்படுத்துகை ஆகிய வகைகளின் கீழும் நிறுவனங்களை கௌரவப்படுத்தும்.

புகைப்பட தொகுப்பு:

From Left to Right: CA Sri Lanka Vice President Mr. Manil Jayesinghe, CA Sri Lanka President Mr. Jagath Perera, Annual Report Awards Committee Chairman Mr. Heshana Kuruppu, Colombo Stock Exchange Chairman Mr. Ray Abeywardena, Colombo Stock Exchange Head of Market Development Mr. Niroshan Wijesundere and CA Sri Lanka Secretary Mr. Prasanna Liyanage.

CA Sri Lanka President Mr. Jagath Perera addressing the media.

Chairman of the Annual Report Awards Committee Mr. Heshana Kuruppu explaining the rationale behind this year’s theme ‘Epitome of Brilliance’

A section of the invitees at the press conference.

Colombo Stock Exchange Chairman Mr. Ray Abeywardena explaining why the CSE came on board once again as a Strategic Partner at this year’s Annual Report Awards competition.

CA Sri Lanka Vice President Mr. Manil Jayesinghe delivering the vote of thanks.