Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

விலக்களிப்பு தொடர்பில் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் (FAQ)

பொதுவானவை

நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட சில தகைமைகளை கொண்டிருந்தால், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) எல்லா பரீட்சைகளுக்கும் தோற்ற தேவை இல்லை. இவ்விதிவிலக்குகளானவை உங்களின் அறிவு மற்றும் திறனனின் அடிப்படையில் சரியான இடத்தில் கற்கையை ஆரம்பிக்க முடியும் என்பதை உணர்த்துகின்றது.

இலங்கை பட்டயக் கணக்காளின் உறுப்புரிமைக்கு பல வழிகள் உள்ளன. பல மாணவர்கள் முன்னைய கற்கைகள் மேற்கொள்கின்றனர், அவை இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சில பரீட்சைக்கு சமனானவையாகும். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனமானது மாணவர்களின் பிரவேசத்தின் போது, அவர்களின் முன்னைய தகைமைகளினூடாக பெற்றுக் கொண்ட அறிவு மற்றும் திறன் என்பவற்றை பொருத்தமான இடத்தில் உறுதி செய்கின்றது.இதனூடாக இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனமானது மாணவர்களுக்கு விரைவாகவும் பொருத்தமான முறையிலும் உறுப்புரிமையை பெற்றுக்கொடுப்பதை இலக்காக கொண்டுள்ளது.

எல்லா விலகளிப்புகளும் மாணவர்கள் கொண்டுள்ள தகைமைகளின் அடிப்படையிலேயே உள்ளது. இலங்கை பட்டயக் கணக்காளர் ஆனது விலகளிப்பு கேள்விகள் சம்மந்தமாக தரவு அடிப்படை  ஒன்றை தயாரித்துள்ளது. இது படிமுறை வழிகாட்டலினூடாக நீங்கள் எந்த விலகளிப்புக்கு கோரலாம் என்பதற்கு வழிகாட்டும். உங்களுக்கு மேலதிகமாக விலகளிப்பு சம்பந்தமாக உதவி வேண்டுமெனில், தயவுசெய்து இலங்கை பட்டயக் கணக்காளர்களின் பதிவகப் பிரிவினை தொடர்பு கொள்க.

நீங்கள் எப்போது இலங்கை பட்டயக் கணக்காளர் மாணவராக பதிவு செய்கின்றீரோ அப்போது நீங்கள் விலகளிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் இலங்கை பட்டயக் கணக்காளரில் மாணவராக பதிவு செய்த பின் ஏதேனும் மேலதிக தகைமைகள் பெற்றால், அத்தகைமைகள் மேலதிகமாக விலகளிப்புக்கு தகுந்தது என நம்பினால், பின்னர் எந்நேரமும் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் தகைமையுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உத்தியோகப்பூர்வ ஆதாரத்துடன் சமர்பிக்க வேண்டும்.  மேலும் தொழில்சார் /கல்விசார் பெறுபேற்றுச் சான்று அல்லது வழங்கப்பட்ட சான்றிதழ்கள் போன்றவற்றின் உறுதி செய்யப்பட்ட பிரதிகளை விலக்களிப்பு கோரல் கடிதத்துடன் இலங்கை பட்டயக் கணக்காளரின் பதிவகப் பிரிவிற்கு சமர்பிக்க வேண்டும்.

தகைமை
விலகளிப்பு தொகை
(ரூபாய்)
Completed CIMA Rs. 60,000.00
Completed ACCA Rs. 60,000.00
CPA Australia Rs. 75,000.00
Executive Level per subject Rs. 1,800.00
Business Level per subject Rs. 3,200.00
Corporate Level per subject Rs. 4,700.00

விலகளிப்புக்கு தகைமையுள்ள மாணவர்கள் பதிவகப் பிரிவினைத் தொடர்பு கொள்க. 2352000 (Ext: 1104 or 1100)

  • கொடுப்பனவை மேற்கொள்ள இலங்கை பட்டயக் கணக்காளரின் மூன்று பிரதிகளைக் கொண்ட வங்கி வைப்புச் சீட்டை (வங்கி பிரதி, இலங்கை பட்டயக் கணக்காளர் பிரதி, மாணவர் பிரதி) பயன்படுத்துமாறு வேண்டப்படுகின்றீர்.

  • பொருத்தமான தொகையை இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் இலங்கை பட்டயக் கணக்காளர் கணக்கின் பெயரில் மேற்கொள்க.  (CA Sri Lanka Panel) இதற்கு பொருத்தமான கொடுப்பனவு வங்கி குறியினை பயன்படுத்துக.(RE03)
  • உங்கள் விண்ணப்பப்படிவத்துடன் இலங்கை பட்டயக் கணக்காளர் மாணவர் பிரதியை இணைத்து மேலும் உங்களுடைய தொழில்சார் மற்றும் கல்விசார்  தகைமைகளின் மூலப்பிரதி, பிரதி செய்யப்பட்ட பிரதிகளையும் பதிவகப் பிரிவிற்கு சமர்பிக்கவும்.
  • பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் ரூபா 15/= முத்திரையிடப்பட்டு சுயமாக விலாசமிடப்பட்ட கடித உறையுடன்,இலங்கை பட்டயக் கணக்காளரின் பதிவகப் பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தயவுசெய்து விலகளிப்பு தொடர்பாக விண்ணப்பிப்பதற்கு இலங்கை பட்டயக் கணக்காளரின் பதிவக பிரிவினை தொடர்புகொள்க:

தொடர்பு:
அலுவலக தொடர்பு  இல : +94 (0) 11 2352000 ((Ext: 1101, 1101 or 1100)
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

விலகளிப்பு சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு, கல்வி முகாமையாளர், கல்விப் பிரிவினை தொடர்பு கொள்க.

தொடர்பு: அலுவலகம் : +94 (0) 11 2352000
தொலை நகல்
: +94 (0) 11 2352060
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இணையத்தளம் : http://www.casrilanka.com

2015 பாடத்திட்டத்திற்கான விலக்களிப்புக்கள் (Knowledge Modules)