செயன்முறை பயிற்சி அல்லது Personal Pillar என்பது 2015 இன் பாடநெறியின் மிக முக்கியமான அம்சமாகும். இது Knowledge and Skills pillars உடன் இணைந்து மிகவும் தனித்துவம் வாய்ந்த ஆற்றலை (தனித்த தகுதிகள்) விருத்தி செய்வதுடன் தொழில் ஸ்தாபனத்தில் மிக சிறப்பான வேலை செய்வதற்கு தேவையான அதிசிறந்த அனுபவத்தினை மாணவர்களிற்கு அளிக்கின்றது.
பட்டயக் கணக்காளரிடம் எதிர்பார்க்கப்படும் தொழில்சார் தேர்ச்சியினை வழங்கும் வகையில், சர்வதேச கணக்கியல் கல்வி நியமங்களுக்கமையவும் (International Accounting Education Standards) புதிய பயிற்சி தேவைப்பாடுகளுக்கமையவும் செயன்முறை பயிற்சி திட்டமானது புதிய பாடநெறி சீரமைப்புடன் சேர்த்து அபிவிருத்தி செய்யப்பட்டது.
புதிய பாடத்திட்டமானது மாணவர்களின் செயன்முறை பயிற்சியினை தொழிலில் இருந்தபடி பயிலுவதை ஊக்கப்படுத்துகின்ற அதேவேளை ஒரு தகுதியான கணக்காளரிடம் எதிர்பார்க்கப்படும் வல்லுநர் திறமை, அறிவு, மனப்பான்மை மற்றும் நடத்தை ஆகியவற்றை வலுவுற செய்கிறது.
குறைந்தபட்சம் ஆண்டொன்றிற்கு வேலை செய்கின்ற 220 நாட்கள் இருக்க வேண்டும். என்ற அடிப்படைக்கு உட்பட்டு, மூன்று வருட பயிற்சியை பயிற்சி பெறுகின்ற மாணவ மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.
பரிந்துரை செய்யப்பட்ட பயிற்சிக் காலமும் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலைகளும்
குறைந்தபட்சம் ஆண்டொன்றிற்கு வேலை செய்கின்ற 220 நாட்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படைக்கு உட்பட்டு, மூன்று வருட பயிற்சியை பயிற்சி பெறுகின்ற மாணவ மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.
முழுமையான செயன்முறை பயிற்சிக் காலம் கீழ்வரும் மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகின்றது.
- Executive level (PE 1)
- Business Level (PB 1)
- Corporate level (PC 1)
பட்டயக் கணக்காளர் செயன்முறை பயிற்சியானது முழுநேர பாடநெறியாகும். மாணவ மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பங்காளரிடம் (training partner) சேர்ந்து ஒரு பட்டயக் கணக்காளரின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற வேண்டும். பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயன்முறை பயிற்சியாக கருதப்பட பயிற்சி உடன்படிக்கை அப்பயிற்சி காலப்பகுதிக்கு செய்து கொள்ளப்பட வேண்டும்.
செயன்முறை பயிற்சி பெறுபவர்கள் கீழ்வரும் ஏதாவது முறையின் இரு பயிற்சி உடன்படிக்கை மூலம் தமது பயிற்சி காலத்தை பூர்த்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
1st Agreement | 2nd Agreement |
Option 1 |
PE1
|
1 year |
PB1+ PC1
|
2 years |
Option 2
|
PE1 + PB1
|
2 years |
PC1
|
1 year |
Option 3
|
PE1 + PB1+PC1
|
3 years |
|
|
தேவை ஏற்படின் மூன்று நிலை பயிற்சிகளையும் ஒரே பயிற்சி உடன்படிக்கையின் மூலம் நிறைவேற்ற முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பங்காளர்கள் (Approved Training Partners)
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பங்காளர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
கணக்காய்வு நிறுவனம்
|
-
|
தொழிலில் ஈடுபடுகின்ற பட்டயக் கணக்காளர்களின் (Public practice organizations) கம்பனி மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களம்.
|
கணக்காய்வு அல்லாத நிறுவனம் |
-
|
கணக்காய்வு நிறுவனமாக வகைப்படுத்தப்படாத ஏனைய அனைத்து பயிற்சி நிறுவனங்கள். |
தற்பொழுது பயிற்சிக்காக பரிந்துரை செய்யப்பட்ட பயிற்சி பங்காளர்கள் 600 க்கு மேல் இருக்கின்றன.
Executive, Business & Corporate levels அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் குறிக்கப்பட்டுள்ள பட்டியல் இணையத்தளத்திலும் நூலகத்திலும் பரிசீலனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பங்காளர் மற்றும் பயிற்சி சந்தர்ப்பங்கள்
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் சேவையாற்றுவதன் மூலம் உரிய செயன்முறைப் பயிற்சியை பூர்த்தி செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இணையத்தளத்தில் காட்டப்பட்டுள்ளன.
பயிற்சி வசதிகளுக்காக பின்வரும் நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பங்களை மாணவ மாணவிகள் சமர்ப்பிக்க முடியும். இன்றேல் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பயிற்சியர் தொழில் வங்கி (training job bank) சேவையை பெற முடியும்.
Download Training Programme & the Rotation Form
அடிக்கடி கேட்கும் வினாக்கள் – செயல்முறைப் பயிற்சி
செயன்முறை பயிற்சி மற்றும் அபிவிருத்தியானது பட்டயக் கணக்காளராவதற்காக உரிய இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத்தின் பாடநெறி 2015 இன் அவசியமான ஒரு அம்சமாகும்.
ஆகவே, நிறுவனம் வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக தகைமை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பரீட்சையுடன் விஷேட பயிற்சித் தேவைகளை மாணவ மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.
நிறுவனம் வழங்குகின்ற சான்றிதழ்கள் வருமாறு: வியாபார சான்றிதழ் கணக்காளர் (Certified Business Accountant – CBA) சிரேஷ்ட வியாபார சான்றிதழ் கணக்காளர் (Certified Senior Business Accountant – (SBA) அங்கத்துவம் சார்ந்த (Associate membership – ACA) மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ் (Certificate to practice)கற்கை நடவடிக்கைகளுடன் செயன்முறைப் பயிற்சியை ஒரே நேரத்தில் பெற்று செயன்முறைப் பயிற்சியின் மூலம் பெறுகின்ற தொழில்சார் திறமைகளை கற்கை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்வதற்கும், கற்கை நடவடிக்கைகளிலிருந்து பெறுகின்ற அறிவை செயன்முறை பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ளும்படி மாணவ மாணவிகளுக்கு தூண்டுதல் அளிக்கப்படுகின்றது.
மாணவராக பதிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலேயே மாணவ மாணவிகளுக்கு செயன்முறைப் பயிற்சியை பெற்றுக்கொள்வதை ஆரம்பிக்க முடியும்.மாணவ மாணவிகள் தமது பட்டயக் கணக்காளர் பரீட்சைகளை ஆரம்பித்தவுடன் சம்பந்தப்பட்ட செயன்முறைப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முழுமையான செயன்முறைப் பயிற்சி காலப்பகுதியானது கீழ்வரும் மூன்று நிலையாக பிரிக்கப்பட்டுள்ளது.
Executive Level (PE1) - இந்நிலையில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள் விழுமியங்களை அடையாளம் காண்பதாலும், அதனுடன் தொடர்புடையனவாததினால் தன்னை விழுமியம் சார்ந்த நடத்தைக்கு (Value based behavior) ஒப்புவிக்கிறார்.
Business Level (PB1) - இந்நிலையில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள், மோதல்களுக்கான சாத்தியமான தீர்வினை காண்பிக்கும் விழுமியம் சார்ந்த வல்லுநர்கள்.
Corporate level (PC1) - இந்நிலையில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள் சமூகப் பொறுப்புடன் செயல்திறன் சிறப்புத்தன்மை காணப்படும் மற்றும் விழுமிய வெளிக்காட்டும் பாத்திரமாவார்.
பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் மூன்று வருட பயிற்சியை ஆண்டொன்றிற்கு குறைந்தது 220 நாட்கள் வேலை செய்பவராக இருக்க வேண்டும். ஆகக் குறைந்த பயிற்சி தேவைப்படும் வேலை நாட்களில் மற்றும் வருடத்தில்,
Minimum Training Requirement | Executive Level | Business & Corporate level |
Business level | Corporate level |
In Years |
1 year |
1 year |
1 year |
In working days |
220 days |
220 days |
220 days |
வேலைநாள் என்பது ஆகக் குறைந்தது 7 மணித்தியாலம் மற்றும் ஆகக் கூடியது 8 மணித்தியாலம் ஆகும்.அறை நாள் விகிதாசார முறையில் கருதப்படும் பகுதி நேர அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகள் வேலை நாளாக கருதப்பட மாட்டாது.
வார இறுதி நாட்களில் வேலை
வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்படும் வேலையில் வருடத்திற்கு ஆகக் கூடியது 10 நாட்கள் மாத்திரமே அங்கீகரிக்கப்படும்.
பரீட்சை | பயிற்சி மட்டமும் பூர்த்திசெய்ய வேண்டிய கால எல்லையும் |
Executive |
பயிற்சி கட்டாயமில்லை |
Business |
பயிற்சி கட்டாயமில்லை |
Corporate |
கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான சான்றிதழுக்கு* தகைமை பெற்றதன் பின்னர் Business level training பயிற்சியைப் (220 நாட்கள்) பூர்த்திசெய்தல். |
* CIMA அங்கத்தினர்களுக்கும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கணக்கீடு மற்றும் /அல்லது நிதி தொடர்பான முழுநேர விரிவுரையாளர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்காக பயிற்சி சந்தர்ப்பங்களைப் பூர்த்தி செய்யாமல் மூலோபாய நிலை II பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதியில்லை.
குறித்த பரீட்சையையும் செய்முறைப் பயிற்சியையும் பூர்த்தி செய்கின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நிறுவனம் வழங்குகின்ற பின்வரும் சான்றிதழ்களைக் கோருவதற்கு உரிமை உண்டு.
- Certified Business Accountant (CBA) பரிந்துரை : பரீட்சை, திறன் தொகுதி (skill module) மற்றும் Executive level பயிற்சியை சார்ந்ததாக நிறைவு செய்தவர்கள் CBA தகுதியினை பெற விண்ணப்பிக்க உரித்துடையவராவார்.
- Certified Senior Business Accountant (CSBA) பரிந்துரை : பரீட்சை, திறன் தொகுதி மற்றும் Business level பயிற்சியை சார்ந்ததாக நிறைவு செய்தவர்கள் CSBA தகுதியினை பெற விண்ணப்பிக்க உரித்துடையவராவார்.
- Associate membership (ACA)பரிந்துரை : கீழ்வரும் வரையறைகளை சார்ந்ததாக பூர்த்தி செய்தவர்கள் Associate membership இற்கு விண்ணப்பிக்க உரித்துடையவராவார்.
- ப. க. நி. அனைத்து பரீட்சைகள் .
- Executive Level மற்றும் Corporate level பயிற்சி அத்தோடு மேற்பார்வை செய்யும் அங்கத்தினரினதும், பயிற்சி நிறுவனத்தினதும் சான்றிதழ்.
- திறன் தொகுதி (skills module)
- வல்லுனர் நெறிமுறை மற்றும் மனப்பான்மை தொகுதி (Professional ethics and attitudes module)
- செயன்முறைப் பயிற்சிக்கான நேர்முகப்பரீட்சை (Viva voice interview)
* மேற்குறிப்பிட்ட சான்றிதழ் சபையின் அங்கீகாரத்துடன் வழங்கப்படும்.
Download Application for Intermediate/CAB Certificate/CBA
Download Application for Diploma in Accounting & Business/CSBA
Download Application for Viva-voce presentation for ACA Membership
கணக்காய்வு பிரிவிலும் கணக்காய்வு அல்லாத பிரிவிலும் executive மற்றும் மூலோபாய நிலைகளுக்குரிய (Business & Corporate) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல்களுக்கு www.casrilanka.com இணையத்தளத்துக்குள் பிரவேசிக்கவும்.
செயல்முறைப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு நிறுவனம் அங்கிகரித்த கணக்காய்வு பிரிவின் நிறுவனமொன்றை அல்லது கணக்காய்வு அல்லாத பிரிவு நிறுவனமொன்றை அந்நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து தேடிக்கொள்ள முடியும்.மேலும், நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
CA web > Student login > Training placement system > Register your profile.
விண்ணப்பதாரியின் தகவல்கள் ப.க.நி. இணையத்தளத்தில் அங்கத்தவர்களின் குறிப்பிற்காக காணப்படும் வேலை வாய்ப்புகள் ஏதும் இருப்பின் நேர்முகப் பரீட்சைக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர்.
நிறுவனத்தின் இணையத்தளத்தில் Students homepage ன் கீழ் Apply for Jobs அழைப்பதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.
CA web > student login > training placement system > Register your profile
பயிற்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் மேற்பார்வை அங்கத்தினர் (Supervising Member) மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் பயிற்சி உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் அவ்வுடன்படிக்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும். செல்லுபடியான உடன்படிக்கையின்றி பெறுகின்ற பயிற்சி நிறுவனம் குறித்தொதுக்குகின்ற செய்முறைப் பயிற்சி தேவைகளின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
As soon as a student joined with an Approved Training Organization the Supervising Member of that respective organization should send a letter to the Institute requesting the set of blank agreement.
Public practice organizations (Audit Sector): should request the agreement with a covering letter in a company letter head.
கணக்காய்வு செய்யப்படாத நிறுவனத்தினால் கம்பனியின் கடிதத் தலைப்புள்ள கடிதத்தின் மூலம் உடன்படிக்கைகளின் பிரதிகளைக் கோர வேண்டும். அத்துடன் பயிற்சித் திட்டத்தையும், பயிற்சி வழங்கும் பிரிவையும் உள்ளடக்கிய மாதிரியையும் (rotation) அனுப்ப வேண்டும்.
பயிற்சி நிகழ்ச்சியையும் மாதிரி படிவத்தையும் தரவிறக்கம் செய்துகொள்க
அடிப்படை தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு உடன்படிக்கைகளின் நிரப்பப்படாத பிரதிகள் வழங்கப்படும். அதன் பின்னர் செல்லுபடியான பயிற்சி உடன்படிக்கை என்ற வகையில் பதிவு செய்வதற்காக நிறுவனம் விசேடமாகக் காட்டியுள்ள கட்டணத்தைச் செலுத்தியதாகக் குறிக்கப்பட்டுள்ள பற்றுச் சீட்டுடன் பொருத்தமான முறையில் நிரப்பப்பட்ட உடன்படிக்கை பிரதியை பயிற்சிப் பிரிவுக்கு கையளிக்க வேண்டும்.
- மாணவனின் அல்லது மாணவியின் பதிவு இலக்கம் மற்றும் பதிவேட்டில் உள்ளவாறு முழுப்பெயர்.
- எதிர்பார்க்கப்படும் மேற்பார்வை அங்கத்தவரின் பெயர், பதவி மற்றும் அங்கத்துவ இலக்கம்.
- எதிர்பார்க்கப்பட்ட பயிற்சி நிலை மற்றும் பயிற்சி ஆரம்பமாகும் திகதி.
- பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் பயிற்சியளிக்கும் பிரிவுகள்.
- பயிற்சி பெறுபவர் மற்றும் மேற்பார்வை அங்கத்தினரைத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய முறை பற்றிய தகவல்கள்.
- ஏற்புடையதாக இருப்பின், பயிற்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு சாட்சி சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகவல்களுக்கு மேலதிகமாக கணக்காய்வு செய்யப்படாத பிரிவின் நிறுவனத்தினால் பின்வரும் ஆவணங்கள் மேற்பார்வை அங்கத்தினரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
- உத்தேச பயிற்சித் திட்டத்தின் மாதிரி.
- பயிற்சி வழங்குகின்ற பிரிவு தொடர்பான விபரங்கள் அடங்கிய மாதிரி படிவம்.
- பயிற்சி பெறுபவரின் பயிற்சி நிலையத்தின் முகவரியும் மேற்பார்வை அங்கத்தினர் சேவையாற்றுகின்ற இடமும் அவ்விருவரின் நிறுவன ரீதியான தொடர்புகளைக் காட்டுகின்ற கடிதமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்காய்வு செய்யப்படுகின்ற பிரிவு மற்றும் கணக்காய்வு செய்யப்படாத பிரிவு ஆகிய இருதரப்பிலும் உடன்படிக்கைக்காக அந்நிறுவனங்களின் கடிதத் தலைப்புடனான கடிதத்தில் மாத்திரம் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சி நிறுவனத்தில் இணைகின்ற முதல் நாளிலிருந்து நான்கு மாதங்களுக்கு மேற்படாத தகுதிகாண் (Probation) காலத்தை பயிற்சிக் காலத்துடன் சேர்த்துக்கொள்ள முடியும்.
மாணவர் உச்ச மாணவ உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் பயிற்சியை ஆரம்பித்திருந்தால்இ குறித்த பயிற்சியை ஆரம்பிக்கின்ற திகதியை நான்கு மாத காலவரையறைக்குட்பட்டு பின்தேதியிடும்படி மேற்பார்வை அங்கத்தினர் ஊடாக அவர் கோர முடியும். ஒவ்வொரு உடன்படிக்கையையும் பின் தேதியிடுவதற்கு முன்வைக்கப்படும் கோரிக்கை பின்வரும் திகதியிலிருந்து 04 மாதங்களுக்கு மேற்படலாகாது.
கணக்காய்வு பிரிவு: பதிவுக்காக உரியவகையில் பூர்த்திசெய்யப்பட்ட பணம் செலுத்தப்பட்ட பயிற்சி உடன்படிக்கை இந்நிறுவனத்துக்குக் கிடைக்கும் திகதி.
கணக்காய்வு செய்யப்படாத பிரிவு: பின்தேதியிடல் கோரிக்கையுடன் பயிற்சி திட்டம் (Training Programme) நமது நிறுவனத்துக்கு கிடைக்கும் திகதி.
எவ்வாறாயினு இத்திகதி நிறுவனத்தில் மாணவன் அல்லது மாணவி ப.க.நி. மாணவராகப் பதிவுசெய்யப்பட்ட திகதிக்கு அல்லது பயிற்சியை உண்மையாக ஆரம்பித்த திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது.
அங்கீகரிக்கப்பட்ட செயன்முறை பயிற்சியாக கருதப்பட பயிற்சி உடன்படிக்கை அப்பயிற்சி காலப்பகுதிக்கு செய்து கொள்ளப்பட வேண்டும். செயற் பயிற்சி பெறுபவர்கள் கீழ்காணும் ஏதாவது முறையில் பயிற்சி உடன்படிக்கை மூலம் பயிற்சி காலத்தை பூர்த்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
1st Agreement | 2nd Agreement |
Option 1 |
PE1
|
1 year |
PB1+ PC1
|
2 years |
Option 2
|
PE1 + PB1
|
2 years |
PC1
|
1 year |
Option 3
|
PE1 + PB1+PC1
|
3 years |
|
|
இது கணக்காய்வு செய்யப்படாத நிறுவனங்களில் (Non public practice org) ஈடுபட்டுள்ள பயிற்சிபெறும் ஆண்/ பெண் பயிலுநர்களுடன் ப.க.நி. பயிற்சி முகாமையாளர் பின்தேதியிடும் காலத்தைத் தீர்மானிப்பதற்காக நடத்துகிற நேர்முகப் பரீட்சையாகும். இது அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கட்டாயமானதல்ல. அத்துடன் நேர்முகப் பரீடசைக்கு பயிற்சி பெறுபவர்களுக்கிடையில் பயிற்சி முகாமையாளரின் தற்றுணியின் பிரகாரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்முகப் பரீட்சை நடத்தப்படும்.
மூலோபாய நிலை பரீட்சைக்கு (Strategic level) தோற்றுவதற்காகவும் பயிற்சி சான்றிதழைப் (முழுநேர தொழிலில் ஈடுபடுகின்ற) (Practical Certificate) பெற்றுக்கொள்வதற்காகவும் செய்முறைப் பயிற்சி வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச பயிற்சித் தேவையைப் பூர