அனைத்து எதிர்கால மாணவ மாணவியரின் வசதியின்பொருட்டு இணையத்தளத்தின் ஊடாகப் பதிவுசெய்யும் நடைமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. மிகவும் எளிதான சில நடவடிக்கைகளின் பின்னர் உங்களுக்கு உலகம் முழுவதிலும் அக்கறையுடன் தேடுகின்ற தொழில்சார் நிபுணர்களாகும் வழியில் பிரவேசிக்க முடியும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மாணவனாக அல்லது மாணவியாகப் பதிவுசெய்துகொள்வதற்கு பின்வரும் தகைமைகளில் ஒரு தகைமை இருக்க வேண்டும்.
- பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கபட்ட இலங்கையில் அல்லது ஏனைய நாடொன்றில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றில் வழங்கப்பட்ட பட்டமொன்று.
- எந்தவொரு பாடநெறியிலும் ஒரே அமர்வில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களில் சாதாரண சித்தி பெற்றிருத்தல்.
- இலங்கை தொழில்நுட்ப கல்லூரியில் கணக்கீட்டு உயர் தேசிய டிப்ளோமா/ கணக்கீடு தொடர்பான டிப்ளோமா அல்லது உயர் தேசிய வாணிப டிப்ளோமா/ வாணிப டிப்ளோமா தொடர்பான பாடநெறிகளில் இரண்டாம் ஆண்டு பரீட்சையில் சித்திபெற்றிருத்தல்.
- முகாமைத்துவ கணக்காளர் பட்டய நிறுவனத்தில் (CIMA-UK) 1ஆம் பகுதியை அல்லது அடிப்படை கட்டம் அல்லது சான்றிதழ் கட்டத்தில் சித்தி பெற்றிருத்தல்.
- பட்டயம் சான்றுப்படுத்தப்பட்ட கணக்காளர் சங்கத்தின் (ACCA-UK) 1ஆம் பகுதி அல்லது அடிப்படை கட்டம் 1ஆம் நிலையில் சித்தி பெற்றிருத்தல்.
- இலங்கை அரசாங்கத்தின் கணக்களார் சேவையில் அங்கத்துவம் பெற்றிருத்தல்.
- இலங்கை அரசாங்கத்தின் கணக்காய்வாளர் சேவையில் அங்கத்துவம் பெற்றிருத்தல்.
- பட்டய செயலாளர்களின் நிர்வாகிகளின் நிறுவகத்தின் இறுதிப் பரீட்சை (ICSA-UK)
- நிதிக் கணக்காளர் நிறுவகத்தின் இறுதிப் பரீட்சை (IFA-UK)
- சர்வதேச கணக்காளர் சங்கத்தின் இறுதிப் பரீட்சை (AIA-UK)
- இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் இறுதிப் பரீட்சை (AAT-SL)
- கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் இறுதிப் பரீட்சை (AAT-UK)
- இலங்கையின் அல்லது ஐக்கிய இராச்சியத்தின் வங்கியாளர் நிறுவனத்தின் இறுதிப் பரீட்சை.
- இலங்கை உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக இருத்தல்.
- பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் அங்கத்துவம்.
- இலங்கை சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்களார் சங்கத்தின் இறுதிப் பரீட்சை (CIMA)
- நிர்வாக சபையினால் அங்கீகரிக்கப்படுகின்ற ஏனைய தகைமையொன்று.
நிறுவனத்தில் ஒரு மாணவனாக அல்லது மாணவியாகப் பதிவுசெய்துகொள்வதற்கு தகைமை உண்டென நினைக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களைப் பதிவுசெய்யும் பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.
- ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்ட பதிவுசெய்யும் விண்ணப்ப படிவம்.
- பதிவுசெய்யும் விண்ணப்ப படிவம் மாணவர் கைநூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. உரிய தகவல்கள் அடங்கிய இவ்வெளியீட்டை நிறுவனத்தின் விற்பனை கரும பீடத்தில் அல்லது கிளை அலுவலகத்தில் ரூ.200/- செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
மாணவர் கைநூலை தபாலில் பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள், டொறிங்டன் சதுக்கத்தின் தபால் அலுவலகத்தில் மாற்றக்கூடியவாறு இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் பெயரில் பெற்றுக்கொண்ட ரூ.200/- பெறுமதியான காசுக்கட்டளையை தமது பெயர் முகவரி குறிப்பிடப்பட்ட குறிப்புடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகாமையாளர் மாணவர் சேவை,
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம்,
30A, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07.
- பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட போட்டோ பிரதி
- கல்விச் சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட போட்டோ பிரதிகள்
- உரிய கட்டணம் செலுத்தப்பட்டது என்பதை சான்றுப்படுத்தும் பண வைப்பு பற்றுச்சீட்டு (நிறுவனத்தின் பிரதி)
- அண்மையில் எடுத்த கடவுச்சீட்டுக்கான அளவிலான வர்ண புகைப்படங்கள் இரண்டு
விண்ணப்பதாரருக்கு பதிவுக்கான தகைமை இருந்தால் நிறுவனம் அவரை மாணவராக/ மாணவியாகப் பதிவுசெய்து அவருக்கு நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்படும்.
பதிவுசெய்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை வருடத்தில் எந்த நாளிலும் சமர்ப்பிக்க முடியும்.
பதிவுசெய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்குத் தேவையான சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் மாணவர் கைநூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்கைநூலை நிறுவனத்தின் விற்பனை கருமபீடத்திலும் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் ரூ.200/- செலுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.
வருடத்தில் எந்த நாளிலும் பதிவுசெய்துகொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை மாணவ மாணவிகள் சமர்ப்பிக்க முடியும்.
2015ஆம் ஆண்டுக்கான மாணவர் கட்டணங்கள்
|
கட்டணம் | |
---|---|
பதிவுசெய்யும் கட்டணம் | 1,800.00 |
வருடாந்த கட்டணம் (தற்போதைய வருடத்திற்காக) | 1,800.00 |
மொத்தம் | 3,600.00 |
சுய கற்கை பாடநெறி கட்டணம்
Executive Level - Per Subject - Rs.1600.00
Business Level - Per Subject - Rs.2350.00
Corporate Level - Per Subject - Rs.3400.00
குறிப்பு :
முதல்முறையாகப் பதிவுசெய்கின்ற மாணவ மாணவிகள் பதிவுக் கட்டணம், பதிவைப் புதுப்பிக்கும் கட்டணம் மற்றும் சுயகற்கை பாடநெறிக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட கொடுப்பனவுகள் தொடர்பாக மொத்த தொகைக்கும் ஒரு பண வைப்பு பற்றுச்சீட்டை மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்ப படிவத்தின் மேல் மூலையில் வைப்பு பற்றுச்சீட்டில் காட்டப்பட்டுள்ள விண்ணப்ப படிவ (#) இலக்கத்தையும் கொடுப்பனவு குறியீட்டையும் (RE 01) குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும்.
ஒருசில பாடங்கள் தொடர்பில் (விடுவித்தல்) தகைமைகள் இருந்தால் பதிவுக் கட்டணம் தொடர்பாக பதிவு செய்யும் பிரிவில் விசாரிக்க வேண்டும். (விடுவிப்பதற்காக கொடுப்பனவுகளைச் செலுத்துகின்றபோது தனியான வைப்பு பற்றுச் சீட்டொன்றைப் பயன்படுத்த வேண்டும்.)
இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் கணக்கில் (A/C # - CA Sri Lanka - Panel) பதிவு கட்டணங்களை வரவுவைக்க வேண்டும்.
பதிவுக்காக விண்ணப்பப்படிவங்களை பதிவுசெய்யும் பிரிவுக்கு அல்லது இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் தகவல் நிலையத்துக்கு வந்து கையளிக்க முடியும். தபாலில் அனுப்பும் விண்ணப்ப படிவங்களை, கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் "SRA" எனக் குறிப்பிட்டு, பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகாமையாளர்,
மாணவர் சேவை,
பதிவுசெய்யும் பிரிவு,
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம்,
30A, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07.
மூன்று வருடங்கள்
எமது மாணவ மாணவிகளுக்கு அதிக சேவையை வழங்குவதற்காக இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனம் மாத்தறை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கண்டி, குருணாகல், இரத்தினபுரி, கல்முனை ஆகிய நகரங்களில் தகவல் நிலையங்களை அமைத்துள்ளது.
இந்நிலையங்களிலிருந்து பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன
- பட்டயகணக்காளர் சேவையில் நிலவும் தொழில் எதிர்பார்ப்பைப்பற்றி எதிர்கால மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல்.
- பதிவு, தகைமை, விடுவித்தல், பயிற்சி மற்றும் அதைச்சார்ந்த ஏனைய விடயங்களைப்பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குதல்.
- மாணவர் கைநூல்களையும் ஏனைய நிறுவன வெளியீடுகளையும் விநியோகித்தல்.
- நிறுவனத்தின் சகல பரீட்சைகளுக்கும் பரீட்சை விண்ணப்ப படிவங்களை விநியோகித்தல் மற்றும் பரீட்சைகள்பற்றிய தகவல்களை வழங்குதல்.
- நிறுவனத்தின் புலமைப்பரீட்சை திட்டம் தொடர்பாக தகவல்களை வழங்குதல்.
- பதிவு விண்ணப்பப்படிவங்களை வழங்குவதற்காக விண்ணப்பங்களையும் பரீட்சை விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்தல்.
அனைத்து விசாரணைகளுக்கும் அழையுங்கள்:
பதிவுசெய்யும் பிரிவு/ மாணவர் சேவை பிரிவு
தொலைபேசி - 011 2352000 நீடிப்பு. 1100,1101,1102,1103,1104,1105,1106