இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் (CA Sri Lanka) உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் பட்டயக் கணக்காளர் (Associate Chartered Accountants) தராதரத்தினை கூட்டுவணிக உலகின் ஆளுகையைக் கொள்ள வலுவளிக்கும் வகையில் 269 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு வழங்குகிறது.
New ACAs and FCAs of CA Sri Lanka
L to R: CA Sri Lanka Secretary Mr. Prasanna Liyanage, CEO Ms. Dulani Fernando, Immediate Past President Mr. Lasantha Wickremasinghe, Council Member Mr. Laknath Peiris, State Minister of Finance Mr. Eran Wickramaratne, Chief Executive Officer of National Development Bank Mr. Dimantha Seneviratne, CA Sri Lanka President Mr. Jagath Perera, Chairman of the Member Relations Committee Mr. Sanjaya Bandara and Past President Prof. Lakshman R. Watawala.
269 புதிய பட்டயக் கணக்காளர்கள் 2019 அக்டோபர் 02 ஆம் திகதி CA Sri Lanka வின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் தங்கள் அங்கத்துவத்தைப் பெற்றனர். அந் நிகழ்வில், நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ. எரான் விக்ரமரத்ன சிறப்பு விருந்தினராகவும், தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. திமந்த செனவிரத்ன கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டார்.
CA Sri Lanka President Mr. Jagath Perera conferring the ACA designation to a new Chartered Accountant in the presence of State Minister of Finance Mr. Eran Wickramaratne and Chairman of the Member Relations Committee Mr. Sanjaya Bandara. | CA Sri Lanka President Mr. Jagath Perera conferring the ACA designation to a new Chartered Accountant in the presence of Chief Executive Officer of National Development Bank Mr. Dimantha Seneviratne and Chairman of the Member Relations Committee Mr. Sanjaya Bandara. |
பட்டமளிப்பில், CA Sri Lanka வின் 225 உறுப்பினர்களுக்கு, அவர்களை தொழில்சார் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் விகையில் மதிப்புமிக்க முதுநிலை பட்டய கணக்காளர் (FCA) அந்தஸ்து வழங்கப்பட்டது.
Chairman of the Member Relations Committee Mr. Sanjaya Bandara conferring the FCA designation to a member in the presence of CA Sri Lanka President Mr. Jagath Perera and Secretary Mr. Prasanna Liyanage.
திரு. விக்ரமரத்ன அவர்கள், தனது வாழ்த்துச் செய்தியில், பல இலங்கையர்கள் தங்கள் தொழில்சார் கனவுகளை நனவாக்கவும், அவர்கள் விரும்பும் வாழ்க்கையைத் தொடரவும் CA Sri Lanka அனுமதிக்கிறது எனக் குறிப்பிட்டார். "புதிய பட்டயக் கணக்காளரகள் இந்தத் தராதரத்துடன் பலம் பொருந்திய ஊழியப்படையாக நுழைகையில், நீங்கள் கற்றுக்கொண்டவற்றையும் இத் தராதரம் உங்களுக்கு வழங்கும் அந்தஸ்தையும் நாட்டின் நலனுக்காக பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வேலைகளை தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் நாணயத்தன்மையுடன் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இலங்கையின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு வழியாக நீங்கள் செய்யும் வேலையையும், அதை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் காண்பீர்கள் என்று நம்புகிறேன்" எனத் தொடர்ந்தும் கூறினார்.
CA Sri Lanka கணக்காளரகள் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களின் ஒரு முதத்pரை, எந்தவொரு வியாபாரத்தையும் வெற்றிகரமாக வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் என்று CA Sri Lanka தலைவர் திரு. ஜகத் பெரேரா தெரிவித்தார். "CA Sri Lanka வின் உறுப்பினராக, நீங்கள் அனைத்து கண்டங்களிலும் உலகளாவிய இயக்கத்தை அனுபவிக்கிறீர்கள், இது இன்று முதல், உலகளாவிய கடவுச்சீட்டை நீங்கள் வெற்றிகரமாக வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு இது சான்றாகும்" என்று அவர் கூறினார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்சார் அமைப்புகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த நிறுவகம் உலகளாவிய ரீதியில் தங்கள் உறுப்பினர்களினது தரநிலையை மேமப்டுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
திரு. செனவிரத்ன, பட்டய கணக்காளர்களை அந்தந்த தொழில்முறை பாத்திரங்களுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்குவதில் செயலில் பங்கு வகிக்குமாறு கேட்டுக்கொண்டார். "சிந்தனை மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் புதுமைகளை இணைப்பதன் மூலம் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள நிதிக் கணக்கியல் ஒழுக்கத்தை வடிவமைத்து வரையறுக்கும் வளமான பட்டய கணக்காளர்களை உருவாக்குவதில், கடந்த அறுபது ஆண்டுகளாக அவர்கள் அளித்து வரும் சிறப்பான சேவைக்காக, CA Sri Lanka க்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என உரையாற்றினார்.
அங்கத்தவர் உறவுகள் குழுவின் தலைவர் திரு. சஞ்ஜய பண்டாரா, தொழிலின் நாணயம் மிக்க தன்மை மற்றும் நெறிமுறைகளைப் பேணுவதன் மூலம் வெற்றியை அடைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். "பட்டயக் கணக்காளர்கள் தொழில் மற்றும் நம் தேசத்தின் மீது பெரும் பொறுப்பை வகிக்கிறார்கள். எனவே, அவர்களின் உறுப்புரிமையைப் பெறும் புதிய உறுப்பினர்கள் இலங்கை மற்றும் உலகம் முழுவதும் எங்கள் தொழிலின் முக்கியத்துவத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்", என்று அவர் கூறினார். திரு பண்டார புதிய முதுநிலை உறுப்பினர்களை நிறுவனத்தின் தகர்க்க முடியாத நிலைப்பாட்டைப் பாதுகாப்பதில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.